உலக மக்கள் அனைவராலும் பொதுவாக பயன்படுத்தப்படும் வீடியோ கால் ஆப் தான் ஸ்கைப். மைக்ரோசாஃப்ட் வழங்கும் இந்த ஆப்பில் க்ரூப் கால் பேசும் வசதியுள்ளது. குறிப்பாக இந்த வசதி கார்ப்ரேட் மற்றும் தொழில் செய்வோர்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது. இந்த வசதி ஸ்மார்ட்ஃபோன், கம்ப்யூட்டர் ஆகியவற்றில் இருக்கிறது. மேலும் மைக்ரோசாஃப்ட் எக்ஸ்பாக்ஸ் ஒன் சீரிஸிலும் இந்த வசதி செய்யப்பட்டிருக்கிறது. தற்போது ஸ்கைப், அதன் முக்கியமான வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ஒரே க்ரூப் காலில் மொத்தம் 50 பேர் பேசும் வசதியை படைத்திருக்கிறது. இதற்கு முன்னர் 25 பேர் பேசும் வசதியை கொண்டிருந்த ஸ்கைப் தற்போது ஒரு அடி முன்னே நகர்ந்துவிட்டதென்றே சொல்லலாம்.
கடந்த மாதம், ஸ்கைப்பில் இந்த வசதி குறித்து சோதனை நடத்தப்பட்டு அதன் வெற்றியாக தற்போது எல்லோரும் பயன்படுத்தும் விதத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வீடியோ மற்றும் ஆடியோ காலிலும் கூட மொத்தம் 50 பேர் பேசும் வசதியை நடைமுறைக்கு கொண்டு வந்த ஸ்கைப் எல்லோருடைய வேலையையும் எளிமையாக்கி விட்டதென்றே சொல்லலாம்.
முன்பெல்லாம் க்ரூப் காலின் ரிங்டோன் டீஃபால்டாக இருக்கும். இப்போது அதன் நோட்டிஃபிகேஷன் அமைப்பை மாற்றி அமைக்கும் வசதி இருப்பதால், தற்போது க்ரூப் காலின் நோட்டிஃபிகேஷன் சிம்பிளாக வரும்படியாகவும், பயன்படுத்துவோருக்கு தொந்தரவு ஏற்படுத்தாத வகையிலும் அமைப்புகள் வந்துவிட்டது.
ஃபேஸ்டைம் என்னும் செயலியில் ஒரு க்ரூப் காலில் மொத்தம் 32 பேர் பேசும் வசதி இருந்தது. அதேபோல எண்டர்ப்ரைஸ்-ஃபோகஸ்டு சாஃப்ட்வேராகிய ஸூம் போன்றவற்றில் ஒரு க்ரூப் காலில் 100 பேர் வரை பேசும் வசதியுண்டு. தற்போது ஸ்கைப் ஒரு க்ரூப் காலில் 50 பேர் பேசும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. தொழில் ரீதியாக மட்டுமல்லாமல், இளைய சமூகத்தினர் அதிகம் பயன்படுத்தும் இந்த ஸ்கைப்பில் இனி உங்கள் தனிப்பட்ட தேவைகளுக்காகவும், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஆடியோ அல்லது வீடியோ க்ரூப் கால் பேசி மகிழ்ந்திடலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்