சியோமி புதிய அறிமுகமாக எம்.ஐ. டிவி. 4 (65 இன்ஞ்) தொலைக்காட்சியை அறிமுகம் செய்யவுள்ளதாக அந்த நிறுவனத்தின் இந்திய தலைமை அதிகாரி மனு குமார் ஜெயின் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டார்.
‘தி பிக் பிக்சர்' என தனது பதிவில் குறிப்பிட்டிருந்த அவர், இந்த செய்தி மூலம் இப்புதிய வெளியிட்டானது இதுவரை சியோமி நிறுவனம் தயாரித்த தொலைக்காட்சிகளில் பெரியதாக இருக்குமோ எனப் பலர் கருதுகின்றனர்.
இந்தியாவில் இதுவரை சியோமி நிறுவனம் தயாரித்ததில் மிகவும் பெரியது 44,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் எம்.ஐ. டிவி 4-ன் 55 இன்ஞ் டிவியாகும்.
இந்த புதிய டிவி வீட்டில் இருந்த படியே சினிமா தியேட்டரில் படம் பார்ப்பது போன்ற திருப்தியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவில் வெளியான 65- இன்ஞ் டிஸ்பிளே கொண்ட டிவி ரூபாய் 63,000 மதிப்புள்ள விலையில் சீனாவில் விற்பனைக்கு உள்ளது. இந்நிலையில் மனுவின் அறிவிப்பை தொடர்ந்து இந்தியாவிலும் வெளிவர வாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் இந்த 65 இன்ஞ் டிவி அறிமுகம் செய்யப்படும் போது சுமார் 60,000 ரூபாய் வரை விற்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிஎஸ்டி யின் விலை குறைப்பால் சியோமி நிறுவனத்தின் பொருட்களின் விலையும் குறைந்துள்ள நிலையில், சியோமி டிவிகள் ரூபாய் 12,000 முதல் விற்பனை செய்யப்படுகிறது என்பது கூடுதல் தகவல்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்