2ஜி.பி ரேம் மற்றும் 16ஜி.பி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி 5ஏ ஸ்மார்ட்ஃபோன் 5,999 ரூபாய்க்கு கிடைக்கிறது.
ஜியோமி நிறுவனம் அறிவித்த ஃபிளாஷ் விற்பனை இன்று இந்தியாவில் நடந்தது. ரெட்மீ நோட் 5 ப்ரோ, எம்.ஐ டிவி 4, எம்.ஐ.டிவி 4ஏ ஆகியவை ஃபிளாஷ் சேலில் விற்பனைக்கு வந்தன. இந்த ஃபிளாஷ் சேல் ஃபிள்ப்கார்ட் மற்றும் mi.com இணையதளத்திலும் நடந்தது. இதனுடன் ரெட்மி 5ஏ ஸ்மார்ட்ஃபோனுக்கான ப்ரீ ஆர்டரும் நடந்தது.
ரெட்மி நோட் 5 ப்ரோவின் விலை 14,999 ரூபாய். 4ஜி.பி ரேம் மற்றும் 64 ஜி.பி ஸ்டோரேஜ் கொண்ட மாடல். 6 ஜி.பி ரேம் மற்றும் 64 ஜி.பி ஸ்டோரேஜ் கொண்ட மாடல் 16,999 ரூபாயும் கொண்டது. கருப்பு, நீலம், தங்க நிறம் மற்றும் ரோஸ் கோல்டு நிறங்களில் இது கிடைக்கும்.
2ஜி.பி ரேம் மற்றும் 16ஜி.பி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி 5ஏ ஸ்மார்ட்ஃபோன் 5,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. 3 ஜி.பி ரேம், 32 ஜி.பி ஸ்டோரேஜுடன் கொண்ட மாடல் 6,999 ரூபாய் வரை விற்பனைக்கு வருகிறது. இந்த ஃபோனுக்கு, ஜியோ 198 ரூபாய் மற்றும் 299 ரூபாய் பிளானுடன் 2,200 ரூபாய் கேஷ்பேக்கும், ஹங்காமா மியூசிக்கில் 3 மாதம் இலவச சந்தாவும் வழங்குகிறது.
55 இன்ச், எம்.ஐ டிவி4 எல்.இ.டி டி.வி 44,999 ரூபாய்க்கு இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. இதோடு 3 மாதத்துக்கான ஹங்காமா பிளே, சோனி லிவ் ஆன்லைன் சேனல்களுக்கான சந்தா இலவசமாக கொடுக்கப்படுகிறது.
43 இன்ச், எம்.ஐ டிவி4ஏ எல்.இ.டி டி.வி 22,999 ரூபாய்க்கு இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. இதோடு 3 மாதத்துக்கான ஹங்காமா பிளே, சோனி லிவ் ஆன்லைன் சேனல்களுக்கான சந்தா இலவசமாக கொடுக்கப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Take-Two CEO Strauss Zelnick Explains Why GTA 6 Is Not Getting a Disc Version
Amazon Freedom Sale 2026: Best Deals on Mechanical Keyboards From RedGear, EvoFox, and More