மலையாளத்தில் மிகவும் பேசப்பட்ட ஆக்ஷன்-த்ரில்லர் படமான மார்கோ, அதன் OTT வெளியீட்டிற்கு திட்டமிடப்பட்டுள்ளது
Photo Credit: Sony LIV
மார்கோ பல மொழிகளில் Sony LIV இல் திரையிடப்படுகிறது
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட கேட்ஜெட் எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். செல்போன் தாண்டி மற்ற தொழில்நுட்ப தகவல்களும் உங்களை வந்து சேரும். இப்போ நாம் பார்க்க இருப்பது Marco படம் பற்றி தான்.
மலையாளத்தில் உன்னி முகுந்தன் மற்றும் நிவின் பாலி நடிப்பில் ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் சக்கைபோடு போட்டு வரும் திரைப்படம் மார்கோ. இப்படம் ஜனவரி 3ம் தேதி தமிழில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகி உள்ளது. மலையாளத்தை போல் தமிழ் ரசிகர்களையும் இப்படம் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை ஹனீப் அடேனி இயக்கி உள்ளார். உன்னி முகுந்தன் நடித்த மலையாள ஆக்ஷன் டிராமாவான மார்கோ பாக்ஸ் ஆபிஸில் 115 கோடிகள் வசூல் செய்துள்ளது.
100 கோடியை தாண்டிய முதல் ஏ-ரேட்டிங் பெற்ற மலையாளப் படமாக இது அமைந்தது. இப்போது OTT ஒப்பந்தம் மூலம் வெளியிடப்பட உள்ளது. இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமையை சோனி எல்ஐவி வாங்கியது. இது மலையாளப் படம் அதிக விலைக்கு வாங்கப்பட்ட சாதனையை படைத்துள்ளது.
மார்கோவின் ஸ்ட்ரீமிங் உரிமை சோனி லைவ் வாங்கியது உறுதி செய்யப்பட்டுள்ளன. சோனி LIV பிப்ரவரி 14 ஆம் தேதி படத்தை ஸ்ட்ரீமிங் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
க்யூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பின் கீழ் ஷரீஃப் முஹம்மத் தயாரித்த ஹனீப் அடேனி இயக்கிய மார்கோ ஒரு நட்சத்திரக் குழுவைக் கொண்டுள்ளது. உன்னி முகுந்தனுடன், சித்திக், ஜெகதீஷ், அபிமன்யு எஸ். திலகன், கபீர் துஹான் சிங், அன்சன் பால், யுக்தி தரேஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரவி பஸ்ரூரின் அபாரமான நடிப்பு படத்தின் இறுக்கமான சூழலை மேம்படுத்துகிறது. இதனால் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 115 கோடி வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இது 7.5 / 10 ஐஎம்டிபி மதிப்பீட்டைக் கொண்டுள்ளது.
இந்தத் திரைப்படம் 2019 ஆம் ஆண்டு வெளியான மைக்கேல் திரைப்படத்தின் ஒரு முழுமையான ஸ்பின்ஆஃப் ஆகும். இருப்பினும் இரண்டு படங்களும் ஒன்றோடொன்று நேரடியாக தொடர்புடையவை அல்ல. ஆனால் மைக்கேலின் சில கதாபாத்திரங்கள் மட்டுமே வித்தியாசமான அமைப்பில் உள்ளன.
இதுவரை படைக்கப்பட்ட சாதனைகளில் அதிக வசூல் செய்த A- தரமதிப்பீடு பெற்ற மலையாளப் படமாகவும் , இந்த ஆண்டின் ஆறாவது அதிக வசூல் செய்த மலையாளப் படமாகவும் , மேலும் ஒன்பதாவது அதிக வசூல் செய்த மலையாளப் படமாகவும் அமைந்துள்ளது. இந்த படம் மலையாளம் தவிர படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி இருக்கிறது.
அடாட்டு என்பது கேரளாவின் மிகவும் பிரபலமான தங்க வணிக குடும்பங்களில் ஒன்றாகும். யாரும் எதிர்பார்க்காத ஒரு மர்ம சம்பவம் அடத்து குடும்பத்தை உலுக்கியது. குடும்பத் தலைவரான ஜார்ஜ், உண்மையை வெளிக்கொணரவும், அதற்கு காரணமானவர்களை கண்டுபிடிக்கவும் புறப்படுகிறார். அதே நேரத்தில், அவரது இளைய சகோதரர் மார்கோ, அதே தேடலைத் தொடங்குகிறார், ஆனால் வேறு பாதையில் செல்கிறார். இது மோதலை உருவாக்குகிறது. இதனை எப்படி கையாளப்போகின்றனர் என்பது தான் படத்தின் கதையாகும். ரு மனிதனின் பழிவாங்கும் பயணத்தைச் சுற்றி, அவனைக் காட்டிக் கொடுத்த அமைப்புகளுக்கே சவால் விடும் படி இருக்கிறது
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy S25 Series Could Get One UI 8.5 Beta Soon; Update Spotted on Samsung Server: Report