அமேசான் பிரைம் வீடியோ மற்றும் நெட்பிளிக்ஸில் ஆபாச காட்சிகள் உள்ளடங்கிய படங்கள், நாடகங்கள் உள்ளன. அதை தடை செய்ய வேண்டுமென்று புதன்கிழமையன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டது. இதற்கு மத்திய அரசின் தலையீட்டினை உயர்நீதிமன்றம் எதிர்பார்க்கிறது.
தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன் மற்றும் நீதிபதி வி.காமேஸ்வர் ராவ் இது தொடர்பான மேல் விசாரணையை வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி நடத்துவார்கள். உரிமைக்கான நீதி என்ற என்ஜிஓ-வினால் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த என்ஜிஓ சார்பாக வழக்கறிஞர் ஹர்ப்ரீத் எஸ். கோரா ஆஜாராகிறார்.
இது குறித்து மனுதாரர் பேசுகையில், ஆன்லைன் தளங்கள், ஆபாசமான கருத்துக்களை வெளிப்படையாக காட்டுகின்றன. ஆபாசமான, அவதூறான, மதத்தால் தடை செய்யப்பட்ட மற்றும் ஒழுக்கமற்ற கருத்துக்களை உள்ளடக்கிய நாடகங்கள், படங்கள் அமேசான் பிரைம் வீடியோ மற்றும் நெட்பிளிக்ஸில் திரையிடப்படுகின்றன. அவை முறையாக சீர்படுத்த வேண்டும்.
ஆன்லைன் தளங்களில் பெரும்பாலும் இந்திய தண்டனை சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்திற்கு எதிராகவே உள்ளது என்று என்ஜிஓ சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்