Photo Credit: Oppo
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Oppo Enco X3 இயர்போன் பற்றி தான்.
Oppo Enco X3 அக்டோபர் 24ல் சீனாவில் Oppo Find X8 சீரியஸ் செல்போன்கள் Oppo Pad 3 Pro அறிமுக விழாவில் வெளியானது. இது ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட OnePlus Buds Pro 3 ரீ-டிசைன் செய்யப்பட்டு போலவே உள்ளது. Dynaudio ஆல் டியூன் செய்யப்பட்ட இந்த Oppo TWS இயர்போன்கள் 11mm பாஸ் டிரைவர்கள் மற்றும் 6mm ட்வீட்டர்களுடன் வருகின்றன. இவை இரட்டை டிஏசி யூனிட்களுடன் பொருத்தப்பட்டுள்ளன. அவை ஆடியோ தரத்தை மேம்படுத்த உதவும் என்று கூறப்படுகிறது. இயர்போன்கள் 43 மணிநேரம் வரை பேட்டரி ஆயுளை வழங்குவதாகக் கூறப்படுகிறது.
Oppo Enco X3 விலை சீனாவில் ரூ. 11,800 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது Oppo China e-store மூலம் முன்கூட்டிய ஆர்டருக்கு ரூ. 11,200 என்கிற சிறப்பு விலையில் கிடைக்கிறது. அக்டோபர் 30 ஆம் தேதி ஷிப்பிங்கைத் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இயர்போன்கள் கருப்பு மற்றும் ஆஃப்-வெள்ளை ஆகிய இரண்டு வண்ணங்களில் வருகிறது.
Oppo Enco X3 சிலிக்கான் மூலம் உருவான உள்-காது வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இயர்போன்கள் பிஞ்ச் டச் மற்றும் வால்யூம் சரிசெய்தலுக்கான ஸ்லைடிங் உள்ளிட்ட டச் கட்டுப்பாடுகளை சப்போர்ட் செய்கிறது. 11 மிமீ பாஸ் டிரைவர்கள் மற்றும் 6 மிமீ ட்வீட்டர்களுடன் வருகிறது. AI சப்போர்ட் உடன் டிரிபிள் மைக் யூனிட்கள் உள்ளன.
Oppo Enco X3 ஆனது 50dB வரை இரைச்சல் கேன்சலேஷனை சப்போர்ட் செய்கிறது. அதிவேக ஸ்பேஷியல் ஆடியோவுக்கான சப்போர்ட் வருகின்றன.
டேனிஷ்நிறுவனமான Dynaudio மூலம் இயர்போன்கள் டியூன் செய்யப்படுகின்றன. தூசி மற்றும் நீர் எதிர்ப்பை தாங்கும் IP55 மதிப்பீடு பெற்ற கட்டமைப்பை கொண்டுள்ளது.
Oppo வெளியிட்ட தகவல்படி Enco X3 இயர்போன்கள் சார்ஜிங் கேஸுடன் 43 மணிநேரம் வரை மொத்த பேட்டரி ஆயுளை வழங்கும். இதற்கிடையில், இயர்போன்கள் மட்டும் ஒருமுறை சார்ஜ் செய்தால் 10 மணி நேரம் வரை நீடிக்கும். இணைப்பு விருப்பங்களில் ப்ளூடூத் 5.4 மற்றும் LHDC 5.0 ஆடியோ கோடெக்கிற்கான சப்போர்ட் அடங்கும். இயர்போன்கள் 54எம்எஸ் குறைந்த லேட்டன்சி கேமிங் பயன்முறையையும் கொண்டுள்ளது. ஒவ்வொரு இயர்பட் எடையும் 5.3 கிராம் எடை கொண்டது. Oppo Enco X3 புளூடூத் 5.4 இணைப்பை சப்போர்ட் செய்யும் என கூறப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்