Noise Buds N1 Pro இவ்வளளோ கம்மி விலையில் கிடைக்குதா?

Noise Buds N1 Pro புதன்கிழமை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. உண்மையான வயர்லெஸ் ஸ்டீரியோ (TWS) இயர்போன் இதுவாகும்.

Noise Buds N1 Pro இவ்வளளோ கம்மி விலையில் கிடைக்குதா?
ஹைலைட்ஸ்
  • நீர் மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான IPX5 மதிப்பீடு பெற்றுள்ளது
  • TWS இயர்போன்கள் இணைவதை சப்போர்ட் செய்கிறது
  • புளூடூத் 5.3 இணைப்பை சப்போர்ட் செய்கிறது
விளம்பரம்

நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். மொபைல் போன்களை தாண்டியும் மற்ற கேட்ஜெட்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். இப்போ நாம் பார்க்க இருப்பதுNoise Buds N1 Pro பற்றி தான். 

இந்தியாவில் மலிவு விலையில் ஒரு அட்டகாசமான மற்றும் சக்தி வாய்ந்த இயர்போனாக Noise Buds N1 Pro அறிமுகம் செய்யப்பட்டு, விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ரூ. 1,500 விலைக்கும் குறைவான விலையில் ஒரு புதிய TWS இயர்பட்ஸ் வாங்க முடியுமா? என்று சந்தேகத்துடன் சுற்றித்திரிந்தவர்களுக்கு இந்த இயர்பட்ஸ் ஒரு நம்ப முடியாத வரப்பிரசாதமாகும். உண்மையான வயர்லெஸ் ஸ்டீரியோ (TWS) இயர்போன் இதுவாகும். ஆக்டிவ் இரைச்சல் கேன்சலேஷன் (ANC) சப்போர்ட் உடன் வருகிறது. இது உங்களுக்கு மிகவும் துல்லியமான ஆடியோ வாய்ஸ் கால் அனுபவத்தை இரைச்சல் இல்லாமல் வழங்குகிறது. மொத்த பேட்டரி ஆயுளை 60 மணிநேரம் வரை வழங்குவதாக கூறப்படுகிறது.  

10 நிமிடம் சார்ஜ் செய்வதன் மூலம் 200 நிமிட பிளேபேக்கை வழங்கும் என கூறப்படுகிறது. இன்ஸ்டாசார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. இயர்போன்கள் 11mm இயக்கிகளை கொண்டுள்ளது. இணைப்பு விருப்பங்களில் ப்ளூடூத் 5.3 மற்றும் HyperSync தொழில்நுட்பம் இருக்கிறது. இது தடையற்ற இணைப்பிற்கு உதவும் என்று கூறப்படுகிறது.  

Noise Buds N1 Pro இந்தியாவில் ரூ. 1,499  என்கிற அறிமுக விலைக்கு கிடைக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் இந்த மாத இறுதிக்குள் அமேசானில் இந்த இயர்போன்களை பிரத்தியேகமாகப் பெறலாம் எனNoise  நிறுவனம் தெரிவித்துள்ளது . இந்த இயர்போன்கள் gonoise.com இணையதளத்திலும் கிடைக்கும். குரோம் பிளாக், குரோம் பீஜ், குரோம் கிரீன் மற்றும் குரோம் பர்பில் ஆகிய நான்கு வண்ணங்களில் இப்போது கிடைக்கிறது. 

ENC சப்போர்ட் கொண்ட குவாட் மைக் அமைப்பைக் கொண்டுள்ளது. செல்போன் அழைப்பு மேற்கொள்ளும் போது  தெளிவாக கேட்கும் . TWS இயர்போன்கள் குரோம் மற்றும் மெட்டாலிக் பூச்சு மற்றும் 32dB ANC மற்றும் டச் கன்ட்ரோல்கள் வரை சப்போர்ட் செய்கின்றன. 40ms வரையிலான குறைந்த சவுண்ட் கேப் இருக்கிறது.  கிரிஸ்டல் கிளியர் ஆடியோவை வழங்குகிறது. இது கேம் அல்லது ஸ்ட்ரீமிங் வீடியோ, ஆடியோ மற்றும் காட்சி வெளியீடுகள் போது சிறப்பாக செயல்பட வைக்கிறது. இயர்போன்களை பாக்ஸில் இருந்து வெளியே எடுக்கும்போது, ஏற்கனவே இணைக்கப்பட்ட சாதனங்களுடன் எளிதாக இணைக்கும் அம்சத்தைக் கொண்டுள்ளன.

Noise Buds N1 Pro ஆனது சார்ஜிங் கேஸ் உட்பட, ஒருமுறை சார்ஜ் செய்தால், 60 மணிநேரம் வரையிலான மொத்த பேட்டரி ஆயுளை வழங்குவதாகக் கூறப்படுகிறது. இன்ஸ்டாசார்ஜ் ஆதரவுடன், 10 நிமிட வேகமான சார்ஜிங் மூலம்  200 நிமிடங்கள் வரை பிளேபேக் நேரத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது. இயர்போன்கள் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபிஎக்ஸ்5 மதிப்பீட்டுடன் வருகின்றன. Instacharge technology தொழில்நுட்பமும் இடம்பெறுகிறது. மேலும் சிரி மற்றும் கூகுள் அஸ்சிஸ்டனட் போன்ற வாய்ஸ் அசிஸ்டன்ட் ஆதரவையும் வழங்குகிறது.
 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Gadgets 360 Staff
 ...மேலும்
        
    
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. 7,000mAh பேட்டரி கொண்ட உலகின் முதல் போன்! Oppo F31 சீரிஸ் லீக் ஆகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!
  2. அவசர வேலைகளில் 'உதவாத' ஏர்டெல்! ஒரே வாரத்தில் இரண்டாவது முறை சேவை முடக்கம்
  3. மடக்கலாம், மிரட்டலாம்! Honor-ன் புது போன் சந்தையில் அறிமுகம்! விலை, சிறப்பம்சங்கள் இதோ!
  4. பெங்களூருவில் Apple-ன் புதிய கடை! செப்டம்பர் 2-ல் திறப்பு! என்ன ஸ்பெஷல்?
  5. இந்தியாவில் Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL லான்ச்! ₹79,999-க்கு Google-ன் புது அஸ்திரம்
  6. கூகிளின் முதல் IP68 ஃபோல்டபிள் போன் லான்ச்! ₹1.72 லட்சத்தில் Pixel 10 Pro Fold
  7. Redmi 15 5G: ₹15,000-க்குள்ளே 7,000mAh பேட்டரி, 144Hz டிஸ்ப்ளே உடன் மாஸ் என்ட்ரி!
  8. Airtel-ன் அதிர்ச்சி அறிவிப்பு! ₹249 ரீசார்ஜ் திட்டம் நீக்கம்! இனி ₹50 அதிகம் செலவு செய்யணும்
  9. Honor X7c 5G லான்ச்! ₹14,999-க்கு 5G போன்! Snapdragon 4 Gen 2 SoC, 5,200mAh பேட்டரி
  10. Airtel-ஆல் வந்த ஜாக்பாட்! 6 மாதங்களுக்கு Apple Music இலவசம்! எப்படி ஆக்டிவேட் செய்வது
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »