உணவு, மளிகைப் பொருட்களைத் தொடர்ந்து, மதுபானங்களை டெலிவரி செய்யும் ஜொமாடோ!

உணவு, மளிகைப் பொருட்களைத் தொடர்ந்து, மதுபானங்களை டெலிவரி செய்யும் ஜொமாடோ!

குடிப்பழக்கத்தின் வயது இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் 18 முதல் 25 வயது வரை தொடங்குகிறது.

ஹைலைட்ஸ்
  • நாடு முழுவதும் மதுபான கடைகள் இந்த வாரம் திறக்கப்பட்டுள்ளன
  • தற்போது ஆன்லைன் விநியோக வசதி இல்லை
  • இது குறித்து ஜொமாடோ எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை
விளம்பரம்

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நாட்டில் மது தேவை அதிகமாகிறது. பல அறிக்கைகளின்படி, இந்த சூழ்நிலையில் Zomato மதுபானங்களை டெலிவரி செய்யவுள்ளது.

சோமாடோ ஏற்கனவே காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை வழங்கத் தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக பல உணவகங்கள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளன. COVID-19 தொற்றுநோய்க்கு பயந்து உணவகங்களிலிருந்து உணவு ஆர்டர் செய்வதையும் மக்கள் குறைத்துள்ளனர்.

மார்ச் 25 அன்று, நாடு முழுவதும் மதுபான கடைகள் மூடப்பட்டன. இந்த வார தொடக்கத்தில் ஒரு மதுபானக் கடையை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, நாடு முழுவதும் உள்ள மதுபானக் கடைகளுக்கு முன்னால் நீண்ட கோடுகள், வட்டங்கள் காணப்படுகின்றன.

டெல்லி அரசு ஏற்கனவே மதுபான விற்பனையைத் தடுக்க 'சிறப்பு கொரோனா கட்டணம்' விதித்துள்ளது. இதற்காக, மதுபானத்தின் விலையில் கூடுதலாக 60 சதவீத வரி செலுத்த வேண்டும். மும்பையில் மதுபானக் கடை திறக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குள் மூடப்பட்டது.

இந்தியாவில் தற்போது மதுபான விநியோக முறை இல்லை. அதனால், ஜொமாடோ இப்போது அந்த வேலையைத் தொடங்கப்போகிறது.

International Spirits and Wines Association of India (ISWAI)-க்கு எழுதிய கடிதத்தில், ஜொமாடோ தலைவர் மோஹித் குப்தா, "வீடு வீடாக மதுபானங்களை வழங்க தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டால், மக்கள் பொறுப்புடன் குடிக்க முடியும்" என்று கூறினார்.

குடிப்பழக்கத்தின் வயது இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் 18 முதல் 25 வயது வரை தொடங்குகிறது. கொரோனா வைரஸ் தொற்று குறைவாக உள்ள பகுதிகளுக்கு மதுபானங்களை வழங்க ஜொமாடோ தற்போது திட்டமிட்டுள்ளது.

ISWAI-ன் நிர்வாகத் தலைவர், மதுபானங்களை வழங்க அனுமதி கோரி மாநிலங்களுக்கு விண்ணப்பித்துள்ளார். இது ஊரடங்கு நிலையில் மாநிலங்களின் வருமானத்தை அதிகரிக்கும் என்று அவர் நம்புகிறார்.

ஊரடங்கின் போது டெலிவரி தொடங்கினால் மக்கள் மது வாங்க வெளியே செல்வதை நிறுத்துவார்கள். இது தொற்று பரவுவதற்கான வாய்ப்புகளை குறைக்கும்.

© Thomson Reuters 2020

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Zomato, Coronavirus, COVID 19, Alcohol
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
© Copyright Red Pixels Ventures Limited 2024. All rights reserved.
Trending Products »
Latest Tech News »