வீடியோ ஷேரிங் மற்றும் ஸ்ட்ரீமிங்கில் உலக அளவில் பிரபலமாக இருக்கும் தளம் யூ-ட்யூப். இந்தத் தளத்தைப் பொறுத்தவரை, இணையம் பயன்படுத்தும் அனைவரும் வீடியோ பார்க்கும் வாய்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில், கொஞ்சம் பணம் கொடுக்கத் தயாராக இருந்தால், ‘யூ-ட்யூப் ரெட்’-ஐ சப்ஸ்கிரைப் செய்து கொள்ளலாம். இதன் மூலம் பல எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்களைப் பார்க்க முடியும்.
மேலும் ரெட் சப்ஸ்கிரைபர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட வந்த வசதியான பிப் (PiP), தற்போது அமெரிக்காவில் இருக்கும் யூ-ட்யூப் பயனர்கள் அனைவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னர், ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ அல்லது அதற்கு மேல் இருக்கும் வெர்ஷன்களில் ஸ்மார்ட் போன் இயங்கு மென்பொருள் இருந்தாலும், பிப் வசதியை பயன்படுத்த முடிந்தது.
பிப் மூலம், ஒரு வீடியோ ஓடிக் கொண்டிருக்கும் போதே, இன்னொரு வீடியோவை ஓட விட்டுப் பார்க்க முடியும். பிரதான வீடியோவில் இருந்து வரும் சத்தம் தான் கேட்கும். இதனால், இந்த வசதி மிகவும் பிரபலமாக இருந்தது. இந்நிலையில், இது தற்போது அமெரிக்காவில் இருக்கும் அனைத்து யூ-ட்யூப் பயனர்களுக்கும் விடப்பட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது. இதனால், சீக்கிரமே உலகம் முழுக்க உள்ள யூ-ட்யூப் பயனர்களும் இந்த வசதியைப் பயன்படுத்தும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று கூறப்படுகிறது.
இந்த வசதியைப் பயன்படுத்து யூ-ட்யூப் மற்றும் போனில் பிப் ஆப்ஷன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்