யாஹூ நிறுவனம் தனது மெசெஞ்சர் சேவையை நிறுத்தியது. இனி யாஹூ மெசெஞ்சர் மூலம் சாட் செய்ய முடியாது. உங்கள் மொபைலில் மெசெஞ்சர் செயலி இருதாலும் இனி லாக் இன் செய்ய முடியாது. உங்கள் சாட் ஹிஸ்ட்ரியை சேமித்து வைத்துக் கொள்ள மெசெஞ்சர் இணையதளத்தில் மட்டும் சேமித்து வைத்துக் கொள்ள முடியும். அதற்கும் நவம்பர் மாதம் வரை தான் அவகாசம் வழங்கப்படுகிறது.
உங்கள் சாட் ஹிஸ்ட்ரியை பதிவிறக்கம் செய்து கொள்ள, யாஹூவின் https://login.yahoo.com/?.done=https://messenger.yahoo.com/getmydata இந்த இணையதளத்துக்கு லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் மூலம் செல்லுங்கள். குறிப்பிட்ட சில வெரிஃபிக்கேஷன் முறையை பயன்படுத்தி, உங்கள் மெயிலுக்கு ஹிஸ்ட்ரியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
மெசெஞ்சரை மூடும் யாஹூ நிறுவனம், 'ஸ்குரில்' என்ற புதிய மெசேஜிங் செயலியை உருவாக்கி வருகிறது. சிறப்பு இன்வைட் மூலம் குறிப்பிட்ட அளவு பயன்பாட்டாளர்களை கொண்டு பீட்டா சோதனை செய்து வருகிறது.
யாஹூ மெசெஞ்சர் 1998 - ம் ஆண்டு மெசெஞ்சர் சேவையைத் தொடங்கப்பட்டது. 20 ஆண்டுகளாக அதன் பயணம் அமைந்திருக்கிறது. மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ் சேவைக்கு மாற்றாக பெரும் வரவேற்பை பெற்ற மெசெஞ்சர், பின் சாட் ஆப்களுடன் போட்டியிட முடியாமல், கொஞ்சம் கொஞ்சமாக பயனாளர்களை இழந்து வந்தது. குறிப்பாக ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸாப் மக்கள் ஆதரவு பெற, யாஹூ மெசெஞ்சர் ஒதுக்கப்பட்டது. இதே போல எம்.எஸ்.என் மெசெஞ்சர், ஏ.ஒ.எல், ஐ.சி.கியூ மற்றும் ஆர்க்குட் போன்ற பிரபல சாட் சேவைகளும் வளரும் போட்டியை தாக்கு பிடிக்க முடியாமல் நிறுத்தப்பட்டன.
பொதுமக்களுக்கு மெசெஞ்சரின் நிறுத்தம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்கலாம். ஆனால், உலக அளவில் கச்சா எண்ணெய் துறையில் இருக்கும் பலரும், யாஹூ மெசெஞ்சரை தங்கள் தொழில் தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தனர். இப்போது அவர்கள் தான் மெசெஞ்சரின் மூடு விழாவுக்கு வருத்தப்படுபவராக இருப்பார்கள்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்