வாட்ஸ்அப் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு பீட்டா பயனர்களுக்கு, குழு அரட்டைகளில் (Group Chats) உள்ள அனைத்து உறுப்பினர்களையும் ஒரே நேரத்தில் டேக் செய்ய உதவும்
கவனச்சிதறல்களைக் குறைக்க பயனர்கள் @all அறிவிப்புகளையும் முடக்கலாம்
நாம எல்லாருமே வாட்ஸ்அப் குரூப்கள்ல இருப்போம். அது ஃபேமிலி குரூப்பா இருந்தாலும் சரி, வேலை சம்பந்தப்பட்ட குரூப்பா இருந்தாலும் சரி, சில சமயம் ஒரு முக்கியமான செய்தியை குரூப்பில் இருக்கும் எல்லோருக்கும் தெரியப்படுத்தணும்னு நினைப்போம். ஆனா, ஒவ்வொருத்தரோட பேரையும் '@' போட்டு டேக் (Tag) பண்றதுக்குள்ள டைம் எடுக்கும். அந்தப் பிரச்சனையை தீர்க்க, வாட்ஸ்அப் நிறுவனம் ஒரு புது அம்சத்தை இப்போ சோதனை செய்ய ஆரம்பிச்சிருக்காங்க! அதுதான் '@all' (Mention All) அம்சம்.
இப்போதைக்கு, இந்த '@all' அம்சம் ஆண்ட்ராய்டு பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கு. இந்த அம்சத்தைப் பயன்படுத்தி, குரூப் மெசேஜில் '@all' என்று டைப் செய்தால், அந்தக் குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒரே நேரத்தில் ஒரு நோட்டிஃபிகேஷன் செல்லும். இதனால, யாருமே முக்கியமான தகவலை மிஸ் பண்ண மாட்டாங்க. அதுவும் குறிப்பாக, ஒரு குழுவை Mute (முடக்கி) வைத்திருந்தாலும்கூட, இந்த '@all' மென்ஷன் மூலமா அறிவிப்பு செல்லும்னு சொல்லப்படுது.
இந்த 'Mention All' அம்சம் ரொம்ப பவர்ஃபுல்லானது. ஆனா, இதை யாராவது தவறா பயன்படுத்தி, அடிக்கடி எல்லாருக்கும் மெசேஜ் அனுப்பி ஸ்பேம் (Spam) செஞ்சு தொந்தரவு கொடுக்கக் கூடாதுன்னு வாட்ஸ்அப் சில கட்டுப்பாடுகளை விதிச்சிருக்காங்க:
● சிறிய குழுக்கள் (Small Groups): ஒரு குழுவில் குறைவான உறுப்பினர்கள் (உதாரணமாக 32-க்கும் குறைவானவர்கள்) இருந்தால், குழுவில் உள்ள அனைவரும் இந்த '@all' அம்சத்தை பயன்படுத்த முடியும்.
● பெரிய குழுக்கள் (Large Groups): குரூப்ல உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக (32 பேருக்கு மேல்) இருந்தால், குரூப் அட்மின்கள் (Group Admins) மட்டுமே இந்த '@all' அம்சத்தைப் பயன்படுத்த முடியும். இது தேவையற்ற நோட்டிஃபிகேஷன்களைத் தடுக்கும்னு வாட்ஸ்அப் நம்புறாங்க.
இது ஒரு பக்கம் இருந்தாலும், சிலருக்கு இந்த '@all' மென்ஷன் அடிக்கடி வந்து தொந்தரவு கொடுத்தா, அதையும் கட்டுப்படுத்த ஒரு ஆப்ஷன் இருக்கு.
குரூப் செட்டிங்ஸ்ல, நோட்டிஃபிகேஷன் பகுதியில '@all' மென்ஷனுக்கான நோட்டிஃபிகேஷனை முடக்கும் (Mute) ஒரு ஆப்ஷனை வாட்ஸ்அப் கொடுத்திருக்கு. இதனால, உங்களுக்கு எது முக்கியம், எது தேவையில்லைன்னு நீங்களே முடிவு பண்ணி, உங்க வாட்ஸ்அப் அனுபவத்தை நிர்வகிக்கலாம்.
இந்த புதிய அம்சம், குழுக்களில் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதை வேகமாகவும், துல்லியமாகவும் மாற்றும்னு எதிர்பார்க்கப்படுது. பீட்டா டெஸ்டிங் முடிஞ்சதும், இந்த அம்சம் விரைவில் அனைத்து ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் (iOS) வாடிக்கையாளர்களுக்கும் வரும்னு நம்பலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Assassin's Creed Shadows Launches on Nintendo Switch 2 on December 2