ஹேக்கர்கள் அபாயம்: உடனடியாக வாட்ஸ்ஆப்-ஐ அப்டேட் செய்யுங்கள், ஏன்? தகவல்கள் உள்ளே!

ஹேக்கர்கள் அபாயம்: உடனடியாக வாட்ஸ்ஆப்-ஐ அப்டேட் செய்யுங்கள், ஏன்? தகவல்கள் உள்ளே!
விளம்பரம்


இந்தியாவில் மிகவும் பிரபலமான சமூக தொடர்பு நிறுவனமான வாட்ஸ்ஆப், நாளுக்கு நாள் புதிய புதிய அறிவிப்புகளையும், அப்டேட்களையும் வெளியிட்ட வண்ணம் உள்ளது. அப்படி இந்த நிறுவனம் சமீபத்தில் அறிவித்துள்ள இந்த அறிவிப்பு சற்று மொபைல்போன்களுக்கு ஆபத்தான அறிவிப்பு போல தெரிகிறது.

இந்த பிரபலமான வாட்ஸ்ஆப் செயலியில் ஒரு பாதிப்பு ஏற்பட்டதால், மொபைல்போன்கள் ஸ்பைவேர் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகக்கூடிய நிலையில் உள்ளது. இதை இந்த செயலியில் ஒரே ஒரு மிஸ்ட் காலின் மூலமாக செய்துவிடலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது. 

இது குறித்து பேஸ்புக்-ன் துணை நிறுவனம் அறிவித்துள்ள அறிவிப்பில், இந்த ஸ்பைவேர் வைரஸ் தாக்குதலை பற்றி கூறுகையில் "ஒரு உயர்தரமான சைபர் செயலி" இந்த மே மாத துவக்கத்திலிருந்து அறியப்படாத எண்ணிலான மக்களின் வாட்ஸ்ஆப் கணக்குகளை தாக்கியுள்ளது. இது குறித்து வாட்ஸ்ஆப்-ன் மக்கள் தொடர்பாளர் கூறுகையில், இந்த சைபர் தாக்குதலால் எத்தனை பேர் பாதித்துள்ளனர் என்பது சரியாக தெரியவில்லை என கூறியுள்ளார்.

இந்த தாக்குதலுக்கான அடையாளம், வாட்ஸ்ஆப் செயலி மட்டுமின்றி அரசுடன் இணைந்து செயல்படும் அனைத்து தனியார் நிறுவனங்களையும் பாதித்துள்ளது என தெரியவருகிறது. 

பைனான்சியல் டைம்ஸ்(Financial Times) பத்திரிக்கையின் நேற்றைய தகவல்படி, இந்த தாக்குதலுக்கு பின் இருப்பது இஸ்ரேலை சேர்ந்த என் எஸ் ஓ(NSO) என்ற அமைப்பு என்பதுm, பெகசுஸ் என்ற மென்பொருளின் உதவியுடனே இந்த தாக்குதலை நடத்தியுள்ளார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த பிரச்னை குறித்து வாட்ஸ்ஆப் நிறுவனம் மேலும் கூறுகையில், இந்த தாக்குதல் நடக்காமல் இருப்பதற்கான தீர்வை தேடி வருகிறோம், மேலும் இதற்கான அப்டேட்டை வெகுவிரவில் வெளியிடுவோம் எனவும் குறிப்பிட்டுள்ளது.


We discussed what WhatsApp absolutely needs to do in 2019, on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: WhatsApp
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »