Photo Credit: WABetaInfo
WhatsApp-ன் ஆண்ட்ராய்டு பேட்டா வெர்ஷன் 2.19.297-ல் ஒரு புதிய அப்டேட் விடப்பட்டுள்ளது. இந்த அப்டேட் மூலம் splash screen கறுப்பு நிறத்தில் தெரிகிறது. வாட்ஸ்அப்-ஐ திறந்தவுடன், லோட் ஆவதற்கு முன்னால் வருவதுதான் இந்த ஸ்பலாஷ் ஸ்க்ரீன். இந்த ஸ்கிரீனில் கறுப்பு நிற வண்ணம் வருவது, அடுத்ததாக வாட்ஸ்அப்பில் டார்க் மோட் வருவதற்கான அறிகுறி என்று சொல்லப்படுகிறது.
இந்த அப்டேட் முதலில், வாட்ஸ்அப் பிசினஸ் செயலியில்தான் தெரிந்ததாம். தற்போது ஆண்ட்ராய்டு வெர்ஷனிலும் தெரிகிறதாம். இது குறித்த தகவலை WABetaInfo தளமும் உறுதி செய்துள்ளது. டார்க் மோட் வசதி எல்லா போன்களுக்கும் வர இன்னும் சில காலம் பிடிக்குமாம்.
இதை கவனிக்க: https://movies.ndtv.com/tamil/kollywood/darbar-movie-exclusive-update-2119372
இதைத் தவிர, வாட்ஸ்அப் வேறொரு அட்டகாசமான அப்டேட் விடுவதிலும் கவனம் செலுத்தி வருகிறதாம். வாட்ஸ்அப்பில் அனுப்பும் மெஸேஜ்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் தானாகவே அழிந்துவிடும் வகையில் அந்த அப்டேட் இருக்குமாம். விரைவில் அனைத்து வாட்ஸ்அப் வெர்ஷன்களுக்கும் இந்த அப்டேட் வருமாம்.
வாட்ஸ்அப் நிறுவனம், ‘வாட்ஸ்அப் பே' குறித்தும் சில மாதங்களாக வேலை செய்து வருகிறது. தற்போதைக்கு இந்த அப்டேட் இந்தோனேசியா நாட்டில் விடப்படும் என்றும் படிப்படியாக அது மற்ற நாடுகளுக்கும் அறிமுகம் செய்யப்படும் என்றும் தெரிகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்