ஐபோன் உபயோகிப்போருக்கு ஒரு நற்செய்தி. ஐபோன் வாட்ஸ்ஆப்பில் இனி குழு ஆடியோ அழைப்புகள் மேற்கொள்ளும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்டவர்களிடம் குழு ஆடியோ அழைப்பின் மூலம் ஒரே சமயம் உரையாடலாம். அதைப்போல, ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ் ஆப் செயலியில் ‘அனைத்தையும் தேர்வு செய்’ (செலக்ட் ஆல்) வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம், வெவ்வேறு குறுஞ்செய்திகளை ஒரே சமயம் தேர்வு செய்து தொகுத்து கொள்ளலாம். தற்போது ஐபோன்களில் கொடுக்கப்பட்டுள்ள இந்த வசதி, வாட்ஸ்ஆப் செயலியை அப்டேட் செய்வதன் மூலம் பெறலாம். ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்கள் இந்தப் புதிய வசதியை, வாட்ஸ்ஆப் பீட்டா வெர்ஷன் 2.18.60 அல்லது அதற்கும் மேற்பட்ட வெர்ஷன்களில் பெறலாம். ஆண்ட்ராய்டு வாட்ஸ் ஆப்பில் வெளியிடப்பட்ட ‘மீடியா தெரிவு அம்சம்’ (மீடியா விசிபிலிட்டி ஃபீச்சர்) வசதியினை தொடர்ந்து பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் வாட்ஸ்ஆப்பில் நமது செயல்பாடுகளை ஒரே நேரத்தில் பல சாட்களை பின் செய்யவோ, தொகுக்கவோ, படிக்கவோ செய்ய இயலும். அதுமட்டும் அல்லாது, ஐபோன் வாடிக்கையாளர்களை தொடர்ந்து ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்களுக்கும் காண்டாக்ட் ஷார்ட்கட் ஐகான் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.
WAபீட்டாஇன்போவின் (WABetaInfo) தகவல்படி, தனி நபர் ஆடியோ அழைப்பில் இருக்கும் அனைத்து வசதிகளும் குழு ஆடியோ அழைப்புகளிலும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பீக்கர் வசதி, வீடியோ அழைப்பு, ம்யூட் வசதி என அனைத்தும் உள்ளது. குழு ஆடியோ அழைப்புகளில் எத்தனை நபர்கள் உரையாடலாம் என்ற வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையை இன்னும் வாட்ஸ் ஆப் நிறுவனம் வெளியிடவில்லை. தற்போது இந்த வசதி குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.
WAபீட்டாஇன்போவின் (WABetaInfo) ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டதாவது, ஐபோனிற்கான வாட்ஸ் ஆப் 2.18.60 வெர்ஷன் வெளியிடும் வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தது. இந்த வெர்ஷனில், இதற்கு முன்பு ‘கணக்கு தகவல் வேண்டி’ (ரெக்வெஸ்ட் அகவுண்ட் இன்போ) வாட்ஸ் ஆப் மூலம் சேகரிக்கப்பட்ட உங்களது கணக்கு விவரங்களை பதிவிறக்கம் செய்வதற்கான வசதியுடன் வெளியிட்டது.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் உருவான குழு அழைப்பு வசதி, இந்த வருடம் பிப்ரவரி மாதம் நடைப்பெற்ற பேஸ்புக் F8 கருத்தரங்கில் அதன் செயல் குறித்து விளக்கப்பட்டது. “ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள் வாட்ஸ் ஆப்பில் பரவலாக பயன்படுத்தும் வசதி ஆகும். இதில் குழு ஆடியோ மற்றும் வீடியோ வசதிகளை வரும் மாதங்களில் வெளியிட திட்டமிட்டுள்ளதில் உற்சாகம் அடைகிறோம்”, என்ற விவரத்தை பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் தனது வலைத்தளப்பதிவில் வெளியிட்டார். மேலும், இந்த வசதியினை சில நாட்களுக்கு முன்னை ஐபோன்களில் காண நேரிட்டது.
ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்களுக்கு ‘அனைத்தையும் தேர்வு செய்’ (செலக்ட் ஆல்) வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த வசதியின் மூலம், படிக்காத குறுஞ்செய்திகளை ஒரே சமயம் தேர்வு செய்தும, ‘படித்தவாறு’ அல்லது ‘தொகுத்து’ வைத்து கொள்ளலாம். இதனோடு கூடவே, மார்க் செய்து ம்யூட் அல்லது உரையாடல் அழிக்கும் வசதியும் கொண்டுவரப்பட்டுள்ளது..
இந்த வசதியை பெற, வாட்ஸ் ஆப் பீட்டா வெர்ஷன் 2.18.60 அல்லது அதற்கும் மேற்பட்ட வெர்ஷனில் கிடைக்கும். ஏதாவது ஒரு குறுஞ்செய்தி தொகுப்பை தேர்வு செய்து, வலது பக்கம் மேலே உள்ள ‘ஆக்ஷன்’ பதிவினை தேர்வு செய்தால், ‘செலெக்ட் ஆல்’ ஆப்ஷன் இடம் பெற்றிருக்கும். அங்கிருந்து ‘பின் சாட்’, ‘டெலீட் சாட்’, ‘ம்யூட் நோடிஃபிகேஷன்’, ‘அர்ச்சீவ் சாட்’, ‘மார்க் ஆஸ் ரெட்/அன்ரெட்’ போன்ற வசதிகள் இடம் பெற்றிருக்கும்.
சமீபத்திய வாட்ஸ் ஆப் வெர்ஷனை பதிவிறக்கம் செய்ய, ஆண்ட்ராய்டு கூகுள் ப்ளேவில் பீட்டா ப்ரோகிராமில் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். அல்லது, APK கோப்பினை APK மிர்ரர் இணையதளத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்