வாட்ஸ்அப்பில் பிரவுசிங் அறிமுகம்! இனி Fake News-களை எளிதில் கண்டுபிடிக்கலாம்!!

ஏற்கனவே போனில் உள்ள பிரவுசருடன் வாட்ஸ்அப் இணைக்கப்படுகிறது.

வாட்ஸ்அப்பில் பிரவுசிங் அறிமுகம்! இனி Fake News-களை எளிதில் கண்டுபிடிக்கலாம்!!

தற்போது குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டும் இந்த வாட்ஸ்அப் பிரவுசிங் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்
  • Search the Web will let you check the authenticity of a message
  • It will also help fight misinformation related to COVID-19
  • The feature is rolling out in select countries right now
விளம்பரம்

வாட்ஸ்அப்பில ்வதந்திகள் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில், வாட்ஸ்அப் பிரவுசிங் வசதி ஒரு சில நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

வதந்திகளையும், போலி செய்திகளையும் கட்டுப்படுத்தும் விதமாக ஃபேஸ்புக், வாட்ஸ்அப் தரப்பில் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு அங்கமாக வாட்ஸ்அப்பில் பிரவுசிங் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

இதன் மூலம் வாட்ஸ்அப்பில் லென்ஸ் ஐகான் (தேடு குறியீடு) கொடுக்கப்பட்டிருக்கும். பயனர்கள் இதன் மூலம் தங்களுக்கு வந்துள்ள மெசேஜ்களை பிரவுசிங் செய்து உண்மையா, பொய்யா என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

இதற்காக வாட்ஸ்அப் பிரவுசர் என்று பிரத்யேகமாக வழங்கப்படவில்லை. மாறாக ஏற்கனவே போனில் உள்ள பிரவுசருடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, வாட்ஸ்அப்பில் பிரவுசிங் செய்தால், நாம் ஏற்கனவே பயன்படுத்தும் பிரவுசரில்தான் தேடுதல் முடிவுகள் கிடைக்கும்.

தற்சமயம் குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டும் இந்த அம்சம் வழங்கப்பட்டுள்ளன. அவை, பிரேசில், இத்தாலி, அயர்லாந்து, மெக்சிகோ, ஸ்பெயின், அமெரிக்கா, இங்கிலாந்து ஆகும். இந்த நாடுகளில் லேட்டஸ்ட் வாட்ஸ்அப் வெர்ஷனில் பிரவுசிங் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் கொரோனா குறித்த வதந்திகளைக் கட்டுப்படுத்தவும், செய்திகளின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தும் விதமாகவும் மத்திய அரசு சார்பில் கொரோனா உதவி மையங்கள் கொண்டு வரப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


In 2020, will WhatsApp get the killer feature that every Indian is waiting for? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. iQOO 13: புதிய பச்சை நிறத்தில் ஜூலை 4-ல் லான்ச்! Snapdragon 8 Elite SoC, 120W சார்ஜிங்குடன் மாஸ்!
  2. AI+ Nova 5G, Pulse: ஜூலை 8-ல் மாஸ் லான்ச்! ₹5,000-க்கு 5G போன்? 50MP கேமராவுடன் வருகிறது!
  3. Vodafone Idea அதிரடி: இனி Family Plan-ல Netflix இலவசம்! டேட்டா, OTT பலன்கள் அள்ளி வழங்கும் Vi!
  4. அறிமுகமாகிறது Tecno Pova 7 Ultra 5G: Dimensity 8350, 144Hz AMOLED, 6000mAh பேட்டரியுடன் வருகிறது!
  5. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  6. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  7. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  8. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  9. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  10. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »