வாட்ஸ்அப்பில ்வதந்திகள் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில், வாட்ஸ்அப் பிரவுசிங் வசதி ஒரு சில நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வதந்திகளையும், போலி செய்திகளையும் கட்டுப்படுத்தும் விதமாக ஃபேஸ்புக், வாட்ஸ்அப் தரப்பில் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு அங்கமாக வாட்ஸ்அப்பில் பிரவுசிங் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் வாட்ஸ்அப்பில் லென்ஸ் ஐகான் (தேடு குறியீடு) கொடுக்கப்பட்டிருக்கும். பயனர்கள் இதன் மூலம் தங்களுக்கு வந்துள்ள மெசேஜ்களை பிரவுசிங் செய்து உண்மையா, பொய்யா என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
இதற்காக வாட்ஸ்அப் பிரவுசர் என்று பிரத்யேகமாக வழங்கப்படவில்லை. மாறாக ஏற்கனவே போனில் உள்ள பிரவுசருடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, வாட்ஸ்அப்பில் பிரவுசிங் செய்தால், நாம் ஏற்கனவே பயன்படுத்தும் பிரவுசரில்தான் தேடுதல் முடிவுகள் கிடைக்கும்.
தற்சமயம் குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டும் இந்த அம்சம் வழங்கப்பட்டுள்ளன. அவை, பிரேசில், இத்தாலி, அயர்லாந்து, மெக்சிகோ, ஸ்பெயின், அமெரிக்கா, இங்கிலாந்து ஆகும். இந்த நாடுகளில் லேட்டஸ்ட் வாட்ஸ்அப் வெர்ஷனில் பிரவுசிங் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் கொரோனா குறித்த வதந்திகளைக் கட்டுப்படுத்தவும், செய்திகளின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தும் விதமாகவும் மத்திய அரசு சார்பில் கொரோனா உதவி மையங்கள் கொண்டு வரப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
In 2020, will WhatsApp get the killer feature that every Indian is waiting for? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்