குரூப் காலிங் லிமிட்டை உயர்த்தியது வாட்ஸ்அப்! இனி 8 நபர்களுடன் பேசலாம்!!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 25 ஏப்ரல் 2020 13:19 IST
ஹைலைட்ஸ்
  • வாட்ஸ்அப்பின் அதிகரித்த குரூப் காலிங் வரம்பு, பீட்டா பதிப்பில் காணப்பட்டத
  • பேஸ்புக்கில் அதிகரித்த வாட்ஸ்அப் வரம்பை மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்தார்
  • பேஸ்புக் மெசஞ்சர், ரூம்ஸ் அம்சத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது

வாட்ஸ்அப், தற்போது குரூப் காலிங்கில் 4 பேரை மட்டுமே ஆதரிக்கிறது

WhatsApp மெசஞ்சர், குரூப் காலிங்கில் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. இதன் மூலம், 4 பேரில் இருந்து 8 பேர் வரை குரூப் காலிங்கில் பேசலாம். இந்த மாற்றம் முதன்முதலில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனின் பீட்டா பதிப்பில் காணப்பட்டது. இந்த மாற்றம், ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் உள்ள பயனர்களுக்கு அடுத்த வாரம் தொடங்கும். 

கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் உலகெங்கிலும் உள்ள மக்கள் வீட்டிலிருந்து சமூக தொலைதூர வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்து வருகின்றனர். எனவே, கடந்த பல வாரங்களாக பெரிய வளர்ச்சியைக் கண்ட Zoom செயலிக்கு போட்டியாக, Facebook-ன் இந்த அறிவிப்பு காணப்படுகிறது.

தினசரி 700 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் வாட்ஸ்அப் மற்றும் மெசஞ்சரை காலிங்கிற்கு பயன்படுத்துகின்றனர். பல நாடுகளில், கோவிட் -19 தொற்று தொடங்கியதிலிருந்து காலிங் இருமடங்காக அதிகரித்துள்ளது என்று மார்க் ஜுக்கர்பெர்க் பேஸ்புக்கில் எழுதினார். அத்துடன், வாட்ஸ்அப் குரூப் காலிங்கிற்கு வரவிருக்கும் மாற்றத்தையும் அவர் அறிவித்தார். 

மேலும், மற்ற பேஸ்புக் தயாரிப்புகளின் பல புதிய அம்சங்களையும், மெசஞ்சர் ரூம்ஸ் வெளியீட்டையும், தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார். பேஸ்புக் மெசஞ்சர் தற்போது virtual room-ஐ பெறுகிறது. இது chat app-ன் பயனர்கள் ஒரே நேரத்தில் 50 பேருடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கும். 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: WhatsApp, WhatsApp Messenger, Facebook, WhatsApp group call
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. iPhone Air 2: 2026-ல் அதிரடி லான்ச்! லீக்கர் கொடுத்த ஷாக் நியூஸ்!
  2. லீக்கான நேரடிப் புகைப்படங்கள் OnePlus Turbo First Look: 9000mAh பேட்டரி மற்றும் மாஸ் டிசைன்!
  3. Motorola Signature Series: பிளிப்கார்ட்டில் அதிரடி டீஸர்!
  4. Samsung Galaxy A07 5G: முன்னெப்போதும் இல்லாத பெரிய பேட்டரி வசதி!
  5. Oppo K15 Turbo Pro: 50MP கேமரா மற்றும் ஆக்டிவ் கூலிங் ஃபேன் - முழு விவரம்
  6. S25 Ultra வாங்க இதுதான் சரியான நேரம்! Flipkart-ல் அதிரடி விலை குறைப்பு + பேங்க் ஆஃபர்ஸ்
  7. HMD-யிடமிருந்து பட்ஜெட் விலையில் செம்ம தரமான TWS ஆடியோ சீரிஸ்! எக்ஸ்50 ப்ரோ முதல் பி50 வரை... முழு விவரம் இதோ
  8. ஸ்மார்ட்வாட்ச் உலகிற்குப் புதிய ராஜா வர்றாரு! Xiaomi Watch 5-ல் அப்படி என்ன ஸ்பெஷல்? இதோ முழு விவரம்
  9. ஒன்பிளஸ் ரசிகர்களுக்கு ஒரு ஜாக்பாட்! ? Nord 4 இப்போ செம்ம மலிவான விலையில Amazon-ல் கிடைக்குது
  10. ஒப்போ ரசிகர்களுக்கு குட் நியூஸ்! Find X8 Pro விலையை ₹19,000 வரை குறைச்சிருக்காங்க. இந்த டீலை விடாதீங்க மக்களே
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.