Photo Credit: Twitter / @WhatsApp
பயனர்களுக்கு அடுத்தடுத்த அப்டேட்டுகளை வழங்கி வரும் WhatsApp, இப்போது மேலும், ஒரு அப்டேட்டை கொண்டுவந்துள்ளது. இனி, வாட்ஸ்அப் குரூப்பில் இருக்கும் அனைவருக்கு, ஐக்கானை கிளிக் செய்வதன் மூலம் குரூப் ஆடியோ / வீடியோ காலிங்கை தொடங்கலாம். இதற்கு முன்பு குரூப் காலிங்கை தனித்தனியாக செய்ய வேண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த மேம்பட்ட அம்சம் பயனர்கள் குரூப் காலிங்கை பயன்படுத்த "எளிதாக்குகிறது".
குரூப் காலிங் மூலம் 4 பேர் மட்டுமே இணைய முடியும் என்பதால், இந்த அம்சம், 4 அல்லது அதற்கும் குறைவான நபர்கள் உள்ள வாட்ஸ்அப் குரூப்பில் மட்டுமே கிடைக்கிறது. இந்த அப்டேட் இந்தியாவில் ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்களுக்கு கிடைக்கிறது.
ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்கள், வாட்ஸ்அப் செயலியின் சமீபத்திய பதிப்பிற்கு அப்டேட் செய்ய வேண்டும்.
பிறகு, 4 அல்லது அதற்கும் குறைவான நபர்களின் வாட்ஸ்அப் குரூப்களைக் கொண்ட பயனர்கள் குரூப் chat-ஐ திறக்கவும்.
குரூப் காலிங்கை செய்ய, திரையின் மேல் வலது மூலையில் இருக்கும் 'வீடியோ' / 'குரல்' அழைப்பு ஐகானைத் தட்ட வேண்டும்.
நான்கு அல்லது குறைவான நபர்கள் இருப்பதால், குரூப் காலிங்கை தானாகவே தொடங்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்