வதந்திகளையும், தவறான செய்திகளையும் அறிந்து அதுகுறித்து பயனாளர்களை எச்சரிக்கை செய்ய புதிய அப்டேட்டை வாட்ஸ் அப் வெளியிட்டுள்ளது
வாட்ஸ் அப் செயலியில் வதந்திகளையும், தவறான செய்திகளையும் அறிந்து அதுகுறித்து பயனாளர்களை எச்சரிக்கை செய்ய புதிய அப்டேட்டை வாட்ஸ் அப் வெளியிட்டுள்ளது.
வாட்ஸ் அப்பில் வரும் பார்வார்டு செய்திகளுக்கு அளவே இல்லாமல் அதிகரித்துவிட்டதன் காரணமாக புதிய அப்டேட்டில் அதை தடுக்க உலகம் முழுவதிலும் இருந்து பயனாளர்கள் வாட்ஸ அப் நிறுவனத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள வாட்ஸ் அப் அப்டேட்டில், அனுப்பப்படும் செய்திகள் பார்வார்டு செய்தியாக இருந்தால் அதனை சுட்டிக்காட்டும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்த செய்தி நேரடியாக டைப் செய்யப்பட்டதா அல்லது வேறு ஒருவரிடம் இருந்து அனுப்பப்பட்டதா என்று கண்டறியமுடியும். இதன் மூலம் போலி செய்திகள் பகிரப்படுவது பெருமளவு குறையும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதுபோல அந்த செய்தியில் இருக்கும் லிங்குகள் சரியானவை தானா ? அல்லது போலியான செய்திகளா என்பதையும் அறியும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் தவறான லிங்குகள் இருந்தால், சிவப்பு டிக் மூலம் வாட்ஸ் அப் பயனாளர்களை எச்சரிக்கும். இதனால், போலி செய்திகளின் மூலம் பயனாளர்கள் ஏமாறாமல் தடுக்க முடியும் என்றும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Prince of Persia: Sands of Time Remake Cancelled Alongside Five Unannounced Ubisoft Games