கடந்த ஆண்டு வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிதாக குரூப் வீடியோ கால் வசதியை அறிமுகப்படுத்தியது. புதிதாக அறிமுகமான இந்த குரூப் கால் வசதி சரியான அமைப்புகளை பெறாததால் வாடிக்கையாளர்கள் மிகவும் அவதிக்குள்ளானார்கள்.
இதைத்தொடர்ந்து வாட்ஸ் ஆப் நிறுவனம் தற்போது ஓரு புதிய அப்டேட்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய அப்டேட் மூலம் குரூப் சாட்களில் தனியாக போன்கால் செய்யும் வசதி இணைக்கப்பட்டுள்ளது. ஐ போன் பயனாளிகளுக்கு இந்த அப்டேட் கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது ஆண்டுராய்டுக்கான அப்டேட் வந்துள்ளது.
இந்த புதிய அப்டேட் மூலம் குரூப் சாட் செய்யும் போதே சைடில் இருக்கும் அமைப்பு மூலம் இனி வீடியோ கால் செய்துகொள்ளலாம். இந்த புதிய அப்டேட் உடன் ஏற்கனவே ஏற்பட்ட பாதிப்புகளும் மாற்றப்பட்டுள்ளது.
இந்த புதிய அப்டேட் மூலம் வாட்ஸ் ஆப் வீடியோ கால் செய்வதற்கு மிகவும் வசதியாக இருக்கும். இம்முறை முதலில் வாட்ஸ் ஆப் பீட்டாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் காலர்களை எளிதில் தேர்வு செய்யும் முறையால் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்கப்படுகிறது.
இதை கூகுள் பிளே ஸ்டோர் அல்லது வாட்ஸ்ஆப்.காம் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ள மூடியும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்