Photo Credit: WABetaInfo
பேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ்அப் அதன் பயனர்களுக்காக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'டார்க் மோட்' அம்சத்தை அறிமுகப்படுத்திய பின்னர் இப்போது ஒரு புதிய அம்சத்தில் செயல்படுவதாக கூறப்படுகிறது. இது பயனர்கள் நிர்ணயித்த நேரத்திற்குப் பிறகு தானாகவே செய்திகளை நீக்கும். இந்த அம்சம் இயல்பாகவே முடக்கப்பட்டுள்ளது, பயனர்களால் இன்னும் அணுக முடியவில்லை
வாட்ஸ்அப்பின் 2.20.83 மற்றும் 2.20.84 ஆகிய இரண்டு ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்புகளில், private chats-ல் self-destructing செய்திகளை அமைப்பதற்கான ஆப்ஷன் கண்டறியப்பட்டது. மேலும், ஒரு மணி நேரத்திற்கு ஒரு நாள், ஒரு நாள், ஒரு வாரம், ஒரு மாதம் அல்லது ஒரு வருடத்திற்கு இடையில் செய்திகளின் காலாவதி காலத்தை ஒருவர் தேர்வு செய்யலாம் என்று WABetaInfo சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
இருப்பினும், புதிய அம்சம் எப்போது நிலையான பதிப்பில் இருக்கும் என்பது தற்போது தெரியவில்லை. ஆனால், டெவலப்பர்களின் குழு, இந்த அம்சத்தில் செயல்படுகிறது என்பதற்கான அறிகுறியாகும்.
சமீபத்திய அறிக்கையின்படி, இந்த அம்சம் ஆரம்பத்தில் group chats-க்கு மட்டுமே கிடைக்கும், மேலும் குழுவின் நிர்வாகிகளால் இதை இயக்க முடியும். இயக்கப்பட்டதும், அம்சத்தை (Contact Info) அல்லது (Group Settings)-ல் மாற்றலாம்.
அது கிடைத்ததும், வாட்ஸ்அப் நீக்குதல் செய்திகளின் (delete messages) அம்சம் ஒரு ஆன்/ஆஃப் பொத்தானைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், செய்திகள் தானாக மறைய - ஒரு மணிநேரம், ஒரு நாள், ஒரு வாரம், ஒரு மாதம் அல்லது ஒரு வருடம் - என்று பயனர்கள் குறிப்பிட்ட நேரத்தை தேர்வு செய்யலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்