வாட்ஸ்அப் பிசினஸ் செயலி (WhatsApp Business app) 'பட்டியல்' (Catalog) என்ற அம்சத்தைப் பெறுகிறது. அதன் பெயர் குறிப்பிடுவதுபோல், புதிய அம்சம் சிறு வணிகங்களுக்கு ஒரு தனித்துவமான தயாரிப்புகளின் மூலம் அவர்களின் சலுகைகளை வெளிப்படுத்தவும், பகிர்ந்து கொள்ளவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. வணிகங்கள் இதுவரை ஒரு முறை வாட்ஸ்அப் பிசினஸ் செயலியைப் பயன்படுத்தி தயாரிப்பு புகைப்படங்களையும் தகவல்களையும் வாடிக்கையாளர்களுடன் மட்டுமே பகிர்ந்து கொள்ள முடியும் என்பதால் இது ஒரு மேம்படுத்தலாக வருகிறது. பட்டியலில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும், விலை, விளக்கம் மற்றும் தயாரிப்புக் குறியீடு போன்ற தகவல்களைச் சேர்க்க முடியும் என்று வாட்ஸ்அப் கூறுகிறது. வணிகங்கள் வாட்ஸ்அப் பிசினஸ் செயலியின் "வணிக அமைப்புகள்" (Business settings) பிரிவில் இருந்து நேரடியாக பட்டியல் (Catalog) அம்சத்தை அணுகலாம்.
ஒரு வணிகமானது புதிய அம்சத்தைப் பயன்படுத்தி ஒரு பட்டியலை உருவாக்கியதும், அதை வணிக சுயவிவரத்தின் ஒரு பகுதியாக அல்லது ஒரு வாடிக்கையாளருடன் வாட்ஸ்அப் பிசினஸ் செயலியின் மூலம் உரையாடும்போது பகிரலாம்.
வணிகங்கள் தங்கள் வாட்ஸ்அப் வணிக செயலியில் உள்ள அமைப்புகள் மெனுவைப் (Settings menu) பார்வையிட்டு Business settings > Catalog-ற்கு செல்வதன் மூலம் தங்கள் பட்டியல்களை உருவாக்கலாம். பல படங்கள், தயாரிப்பு அல்லது சேவை பெயர், விலை, விளக்கம், இணைப்பு மற்றும் தயாரிப்பு அல்லது சேவைக் குறியீட்டைச் சேர்க்க விருப்பங்கள் (options) உள்ளன. இந்த விருப்பங்கள் பட்டியல் பக்கத்தில் (Catalog page) தெரியும். மேலும், வணிகங்கள் ஒரே பக்கத்தில் வழங்கும் பல்வேறு வகையான தயாரிப்புகள் மற்றும் சேவைகளைக் காண்பிக்கும் வாய்ப்பைக் கொண்டுள்ளன.
ஏற்கனவே உருவாக்கிய பட்டியல்களை எளிதாகப் பகிர, வாட்ஸ்அப் பகிர்வு மெனுவில் ஒரு பட்டியல் பொத்தானை (Catalog button) வழங்கியுள்ளது. அம்சத்துடன் எவ்வாறு தொடங்குவது என்பது ஒரு வீடியோவில் விவரிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, பிரேசில், ஜெர்மனி, இந்தோனேசியா, மெக்ஸிகோ, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் அண்ட்ராய்டு மற்றும் ஐபோன் இரண்டிலும் சமீபத்திய வாட்ஸ்அப் பிசினஸ் செயலியைப் பயன்படுத்தி வணிகங்களுக்கான பட்டியல் அம்சத்தை வாட்ஸ்அப் ஆரம்பத்தில் வெளியிடுகிறது. இருப்பினும், இது எதிர்காலத்தில் உலகம் முழுவதும் உள்ள வணிகங்களை அடையவும் அமைக்கப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்