WhatsApp-ன் விதிமுறைகளில் Meta கொண்டு வந்துள்ள முக்கியமான மாற்றம். ChatGPT, Copilot போன்ற மூன்றாம் தரப்பு AI சேவைகள் இனி பயன்படுத்த முடியாது
Photo Credit: Meta
Meta பாதுகாப்பு மற்றும் தரவு கட்டுப்பாட்டுக்காக ChatGPT, Copilot போன்ற AI-க்கு தடை; புதிய விதிகள் 15 ஜனவரி 2026 முதல் அமலும்
நம்ம டெக் உலகத்துல AI-ன்னா இப்போ பயங்கர ட்ரெண்டிங். வாட்ஸ்அப்-ல சாட் பண்ணும்போதுகூட ஒரு AI Bot பக்கத்துல இருந்து ஹெல்ப் பண்ணா நல்லா இருக்கும்னு நிறைய பேர் யூஸ் பண்ணிட்டு இருந்தோம். ஆனா, இப்போ ஒரு முக்கியமான தகவல் வந்திருக்கு. அதாவது, Meta நிறுவனம் வாட்ஸ்அப்-ல மூன்றாம் தரப்பு LLM (Large Language Model) சாட்பாட்களுக்குத் தடை விதிச்சிருக்கு!"LLM சாட்பாட்"-ன்னா என்னன்னு தெரியாதவங்களுக்கு சொல்றேன். நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச ChatGPT, Microsoft-டோட Copilot மாதிரி பெரிய AI மாடல்களை வச்சு இயங்குறதுதான் இந்த சாட்பாட்கள். இதுவரைக்கும் நீங்க வாட்ஸ்அப் குள்ளேயே இந்த AI Bot-களை பயன்படுத்தி வந்திருப்பீங்க. ஆனா, இப்போ Meta அதோட விதிமுறைகளை மாத்தி, ஜனவரி 15, 2026-க்கு அப்புறம் இந்த தேர்ட் பார்ட்டி சாட்பாட்களை உள்ளேயே விட முடியாதுன்னு சொல்லிட்டாங்க!
ஏன் இந்த அதிரடி முடிவு? சிம்பிளா சொன்னா, Meta-வுக்கு போட்டி பிடிக்கல! அவங்க இப்போ Meta AI-ன்னு அவங்களுக்கேன்னு ஒரு சொந்த AI சாட்பாட்டை களத்துல இறக்கி இருக்காங்க. தங்களோட சொந்த ஆப் (WhatsApp)-ல வெளியாட்கள் வந்து ஆதிக்கம் செலுத்தக்கூடாது; அவங்களுடைய Meta AI மட்டும்தான் கொடிகட்டிப் பறக்கணும்ன்றதுதான் அவங்களுடைய திட்டம்.
ஏற்கனவே இந்த அப்டேட் வரப்போகுதுன்னு தெரிஞ்சுதான், OpenAI நிறுவனம் கடந்த மாசமே நாங்க வாட்ஸ்அப்-ல இருந்து கிளம்புறோம்னு சொல்லிட்டாங்க. அதே மாதிரி, Microsoft-ம் அவங்களுடைய Copilot சேவையை இந்த வார ஆரம்பத்துலயே வாட்ஸ்அப்-ல இருந்து எடுத்துட்டாங்க. இப்போ Meta அதிகாரப்பூர்வமா விதிமுறையையே மாத்திட்டாங்க.
இந்தத் தடை சாதாரண வாட்ஸ்அப் யூஸர்களுக்கு மட்டுமில்ல, வாட்ஸ்அப் பிசினஸ் அக்கவுண்ட் வச்சிருக்குறவங்களுக்கும் பொருந்தும். அதாவது, WhatsApp Business யூஸர்ஸாலகூட ஜனவரி 15-க்கு அப்புறம் ChatGPT, Copilot மாதிரி வேற எந்த AI Bot-ஐயும் பயன்படுத்த முடியாது. இது அவங்களுடைய வாடிக்கையாளர் சேவையை (Customer Service) பெரிய அளவுல பாதிக்கும்னு எதிர்பார்க்கப்படுது.
ஆனா, ஒரு சின்ன ஆறுதல் இருக்கு. ஒரு சில பிசினஸ்கள், கஸ்டமர்களுக்கு சேவையை வழங்குறதுக்காக ஸ்பெஷலா ஒரு AI Bot-ஐ வச்சிருப்பாங்க. அந்த மாதிரி AI Bot-களுக்கு மட்டும் விதிவிலக்கு கொடுத்திருக்காங்க. மத்தபடி, ஜெனரல் யூஸுக்காக வர்ற பெரிய AI சாட்பாட்களுக்கு வாட்ஸ்அப் கேட் க்ளோஸ்!
இந்த மாற்றத்துல முக்கியமான ஒரு விஷயம் என்னன்னா, இவ்வளவு நாளா நீங்க ChatGPT-யில பண்ண சாட் ஹிஸ்டரியை நீங்க வேறொரு இடத்துக்கு மாத்திக்கிறதுக்கு (migrate) ஒரு வாய்ப்பு கொடுத்திருக்காங்க. ஆனா, Copilot யூஸ் பண்ணவங்களுக்கு அந்த வாய்ப்பு இல்லையாம்.
மொத்தத்துல, இந்தத் தடையை ஒரு பக்கத்துல, வாட்ஸ்அப்-ல இனி Meta AI-ன் ஆதிக்கம்தான் இருக்கும்னு பார்க்கலாம். இன்னொரு பக்கத்துல, யூஸர்களுக்கு அவங்க விரும்பிய AI Bot-ஐப் பயன்படுத்த முடியாம போறது ஒரு பெரிய ஏமாற்றம்தான். இந்த Meta-வின் முடிவு பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு கமெண்ட்ஸ்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Infinix Teases New Smartphone Co-Designed With Pininfarina, Launch Set for Next Month
Cyberpunk 2077 Sells 35 Million Copies, CD Project Red Shares Update on Cyberpunk 2 Development