சமீபத்திய வாட்ஸ்அப் மாற்றங்கள், செயலியின் பீட்டா பதிப்பு 2.19.354-ன் ஒரு பகுதியாகும்.
வாட்ஸ்அப் அதன் ஆண்ட்ராய்டு செயலியில், ஆழமான இருண்ட பயன்முறை ஒருங்கிணைப்பைக் கொண்டுவருவதாகத் தெரிகிறது
வாட்ஸ்அப் தனது ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் செயலிக்கான இருண்ட பயன்முறையில் சில காலமாக செயல்பட்டு வருகிறது. ஆனால் இப்போது, ஆண்ட்ராய்டு பதிப்பிற்கான சமீபத்திய வாட்ஸ்அப் பீட்டா, தற்போதைய வளர்ச்சி தொடர்பான சில குறிப்பிடத்தக்க மாற்றங்களை சுட்டிக்காட்டியுள்ளது. பீட்டா அப்டேட் இருண்ட பயன்முறையில் புதிய அவதார் ஒதுக்கிடங்களை உள்ளடக்கியதாகத் தெரிகிறது. இதேபோல், இருண்ட கூறுகளைக் கொண்ட புதிய VoIP திரை உள்ளது. ஒரு பயனர் வாட்ஸ்அப் அழைப்பைப் பெற்றவுடன் இந்தத் திரை மேற்பரப்பில் வரும். புதிய மாற்றங்கள் Android-க்கான சமீபத்திய வாட்ஸ்அப் பீட்டா பதிப்பின் ஒரு பகுதியாகும். இருப்பினும், அவை இன்னும் பொதுமக்களுக்குத் தெரியவில்லை.
ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப் பீட்டா பதிப்பு 2.19.354-ல் இருண்ட பயன்முறை-மையப்படுத்தப்பட்ட மாற்றங்களின் புதிய தொடர் உள்ளது. இந்த புதிய அப்டேட்டில் ஒளிபரப்புகள், தனிப்பட்ட சுயவிவரங்கள் மற்றும் சாம்பல் பின்னணி கொண்ட குழுக்களுக்கான அவதார் படங்கள் (அல்லது ஒதுக்கிட ஐக்கான்கள்) (placeholder icons) அடங்கும். இருண்ட பயன்முறை இயக்கப்பட்டவுடன், இவை பயனர்களுக்குத் தெரியும் என்று வாட்ஸ்அப் பீட்டா வாட்சர் WABetaInfo தெரிவித்துள்ளது.
![]()
வாட்ஸ்அப் இருண்ட பயன்முறையுடன் பொருந்தக்கூடிய புதிய அவதார் படங்களை கொண்டு வருவதாக தெரிகிறது
Photo Credit: WABetaInfo
முன்னிருப்பாக வாட்ஸ்அப் ஒரு பச்சை பின்னணியுடன் (green background) அவதார் படங்களைக் கொண்டுள்ளது - மேலே கிடைக்கும் அடர் பச்சை நிற ரிப்பனுடன் பொருந்துகிறது
புதிய அவதார் படங்களுடன், ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான சமீபத்திய வாட்ஸ்அப் பீட்டா பதிப்பில் இருண்ட பயன்முறையை ஆதரிக்க புதிய VoIP திரை இருண்ட கூறுகள் இருப்பதாக தெரிகிறது. புதிய திரை தற்போதைய VoIP திரையில் இருக்கும் பச்சை பின்னணியைத் (green background) தொடரும், ஆனால், கண் இமைகளை ஓரளவிற்குக் குறைக்க இருண்ட நிறத்துடன் இருக்கும். இருண்ட பயன்முறையை மக்களிடம் கொண்டு வருவதற்கு முன்பு, வாட்ஸ்அப் மேலும் இடைமுக-நிலை மாற்றங்களைச் செய்யும் என்று தெரிகிறது.
![]()
வாட்ஸ்அப் இருண்ட கூறுகளுடன் புதிய VoIP திரையைக் கொண்டு வரக்கூடும்
Photo Credit: WABetaInfo
சொல்லப்போனால், சமீபத்திய மாற்றங்கள் பொதுவில் தெரியவில்லை. இருப்பினும், உங்கள் Android சாதனத்தில் சமீபத்திய வாட்ஸ்அப் பீட்டா பதிப்பை கூகுள் பிளே பீட்டா நிரல் (Google Play beta programme) வழியாக அல்லது APK Mirror-ல் இருந்து அதன் APK மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.
கடந்த வாரம், வாட்ஸ்அப் அதன் பீட்டா பதிப்பு 2.19.348-ஐ ஆண்ட்ராய்டு சாதனங்களுக்காக கொண்டு வந்தது, இது சுய அழிவை ஏற்படுத்தும் ‘செய்திகளை நீக்கு' (Delete messages) அம்சத்தை சேர்த்தது. கூடுதலாக, பயனர்கள் தங்கள் தொடர்புகளுக்கு ஒரு புதிய செய்தி எவ்வளவு காலம் தெரியும் என்பதைத் தேர்வுசெய்ய அனுமதிக்கும்.
எதிர்பார்க்கப்பட்ட இருண்ட பயன்முறையும் பல மாதங்களாக வளர்ச்சியில் உள்ளது. இது கடந்த மாதம் ஐபோனிலும் சோதனை செய்யப்பட்டது. ஆயினும்கூட, பேஸ்புக்கிற்குச் சொந்தமான நிறுவனம் அதன் வளர்ச்சியை முறையாக வெளிப்படுத்தவில்லை.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Four More Shots Please Season 4 OTT Release: Where to Watch the Final Chapter of the Web Series
Nari Nari Naduma Murari OTT Release: Know Where to Watch the Telugu Comedy Entertainer
Engineers Turn Lobster Shells Into Robot Parts That Lift, Grip and Swim
Strongest Solar Flare of 2025 Sends High-Energy Radiation Rushing Toward Earth