வாட்ஸாப் நிறுவனம் மியூட் மற்றும் mark as read பட்டன்களை தனது பீட்டா வெர்ஷனில் சோதித்து வருகிறது
வாட்ஸாப் நிறுவனம் மியூட் மற்றும் mark as read பட்டன்களை தனது பீட்டா வெர்ஷனில் சோதித்து வருகிறது. நோட்டிஃபிக்கேஷன்களை இந்த பட்டன் மூலம் மியூட் செய்ய முடியும். 51 மெசேஜ்களுக்கு மேல், ஒரே நபரிடம் இருந்து மெசேஜ் வந்தால், இந்த மியூட் பட்டன் நோட்டிஃபிக்கேஷனில் தோன்றும். ரிப்ளை டூ பட்டனுக்கு பதில் இந்த மியூட் பட்டன் இடம்பெற்றிருக்கும். இதன் மூலம் வாட்ஸாப்பை திறக்காமலே, மேசேஜ்களை மியூட் செய்ய முடியும்.
இந்த பீட்டா வெர்ஷனை apk ஆக கூகுள் பீட்டா புரோக்கிராமில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அனைத்து பீட்டா பயன்பாட்டாளர்களுக்கும் மியூட் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், mark as read பட்டன் பீட்டா பயன்பாட்டாளர்களுக்கு இன்னும் கொடுக்கப்படவில்லை.
![]()
மேலும்,அந்நிறுவனம் ஸ்டிக்கர்களையும் சோதனை செய்துவருகிறது. பீட்டா வெர்ஷன் 2.18.218-ல் இந்த ஸ்டிக்கர்கள் சோதனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கூடிய விரைவில், ஸ்டிக்கர்கள் பொது பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம். மேலும், வாட்ஸாப் ஸ்டிக்கர் ஸ்டோரில், புதிய அப்டேட்டட் ஸ்டிக்கர்களுக்கு பச்சை நிற பிளஸ் சின்னம் கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிய வந்துள்ளது.![]()
WABetaInfo என்ற நிறுவனம் வெளியிட்ட தகவல் படி, Bibimbap Friends மற்றும் Unchi & Rollie என்ற பெயரில் புதிய ஸ்டிக்கர்கள் இடம் பெற்றிருப்பதாக படங்களோடு கூறியிருக்கிற்து. ஃபேஸ்புக்கின் ஒரு பிளாக்கில், வெளியில் இருந்து டெவலப்பர்கள் உருவாக்கும் ஸ்டிக்கர்களும் வாட்ஸாப்பில் கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Dining With The Kapoors OTT Release Date Revealed: Know When and Where to Watch it Online
Stranger Things Season 5 OTT Release Date: Know When and Where to Watch it Online