வோடபோன், பிரபலமான ரூ.149 ரீசார்ஜுக்கு ரூ.10 கேஷ்பேக்கையும், ரூ.249 ரீசார்ஜுக்கு ரூ.20 கேஷ்பேக்கையும் வழங்குகிறது.
வோடபோன், ஏப்ரல் 30 வரை பயனர்களை கேஷ்பேக் சம்பாதிக்க அனுமதிக்கும்
ஏர்டெல் மற்றும் ஜியோவை அடுத்து, வோடபோன் ஐடியாவும் ஒரு புதிய #RechargeforGood திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் மூலம், சந்தாதாரருக்கு, பிற ப்ரீபெய்ட் கணக்குகளை ரீசார்ஜ் செய்வதற்கான கமிஷனைப் பெற உதவுகிறது. சந்தாதாரர்கள் MyVodafone மற்றும் MyIdea செயலிகளை பயன்படுத்தி மட்டுமே ரீசார்ஜ் செய்ய வேண்டும். இதன் மூலம் வோடபோன் 6 சதவீதம் கேஷ்பேக்கை வழங்குகிறது. வேறு எந்த தளத்தில் இருந்து ரீசார்ஜ் செய்தாலும் கேஷ்பேக் பெற முடியாது.
Vodafone சந்தாதாரர்கள் தனித்தனியாக பதிவு செய்ய வேண்டியதில்லை அல்லது இந்த பணத்தை திரும்பப் பெற மற்றொரு செயலியை இன்ஸ்டால் செய்யவும் வேண்டியதில்லை. அவர்கள் ரீசார்ஜ் செய்தால் போதும். கேஷ்பேக் தொகை 96 மணி நேரத்திற்குள் பயனர் கணக்கில் கிரெடிட் செய்யப்படும்.
வோடபோன், பிரபலமான ரூ.149 ரீசார்ஜுக்கு ரூ.10 கேஷ்பேக்கையும், ரூ.249 ரீசார்ஜுக்கு ரூ.20 கேஷ்பேக்கையும் வழங்குகிறது. ரீசார்ஜ் மதிப்பின் அடிப்படையில் கேஷ்பேக் மாறுபடும். வோடபோன் 6 சதவீதம் வரை கேஷ்பேக் வழங்குகிறது. இந்த கேஷ்பேக், Jio மற்றும் Airtel-ன் இதே போன்ற திட்டங்களில் 4.16 சதவிகித கமிஷனை விடவும், 4 சதவிகித கேஷ்பேக்கை விடவும் 2 சதவீதம் அதிகமாகும். வோடபோன், ஏப்ரல் 30 வரை பயனர்களை கேஷ்பேக் சம்பாதிக்க அனுமதிக்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
iQOO Z11 Turbo Battery, Charging Details Confirmed; Tipster Leaks Camera Specifications
CES 2026: Eureka Z50, E10 Evo Plus Robot Vacuum Cleaners Launched, FloorShine 890 Tags Along