Microblogging தளமான ட்விட்டர் வியாழக்கிழமை (இன்று) Web, iOS மற்றும் Android-ல் உள்ள அனைத்து பயனர்களுக்கும் நேரடி செய்திகளுக்கான புதிய ஈமோஜி ரியாக்ஷன்களை வெளியிட்டது.
இது, 2017-ஆம் ஆண்டில் பேஸ்புக் மெசஞ்சரில் மீண்டும் சேர்த்த செயல்பாட்டைப் போன்றது. இது ஒவ்வொரு குறிப்பிட்ட செய்திக்கும் ஈமோஜி பதிலை ஒதுக்க பயனர்களுக்கு உதவுகிறது.
அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு, ஈமோஜியின் சரத்தை பகிரும் அம்சத்தைக் கிண்டல் செய்தது. இந்த அம்சம் நேரலைக்கு வந்தவுடன் கிடைக்கும்.
Say more with new emoji reactions for Direct Messages!
— Twitter Support (@TwitterSupport) January 22, 2020
To add a reaction, click the ❤️➕ icon that appears when you hover over the message on web or double tap the message on mobile and select an emoji from the pop-up.
For more about DM reactions: https://t.co/sdMumGDBYl https://t.co/QxMVmGt8eY
ஈமோஜி ரியாக்ஷன் சேர்க்க, செய்தியை நகர்த்தி, 'reaction button' எனப்படும் heart பொத்தானை click/tap செய்யவும்.
ஒரு பயனர் செய்தியை double-tap செய்யவும், பாப்-அப் செய்த பிறகு ஈமோஜி ரியாக்ஷனை தேர்ந்தெடுக்கவும் முடியும்.
"நேரடி செய்திகளுக்கான புதிய ஈமோஜி ரியாக்ஷன்களுடன், மேலும் சொல்லுங்கள். ஒரு ரியாக்ஷனை சேர்க்க, நீங்கள் Web-ல் செய்தியை நகர்த்தும்போது தோன்றும் ஐகானைக் கிளிக் செய்க அல்லது மொபைலில் செய்தியை double tap செய்யவும் மற்றும் பாப்-அப் மூலம் ஒரு ஈமோஜியைத் தேர்ந்தெடுக்கவும்" என்று நிறுவனம் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
சமீபத்திய அம்சம் ஏழு புதிய ரியாக்ஷன்களை உள்ளடக்கியது மற்றும் text அல்லது media இணைப்புகள் என எந்தவொரு நேரடி செய்திகளுக்கும் ஈமோஜி ரியாக்ஷனை சேர்க்கலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்