‘தப்ப கண்காணிக்க நிறைய பேர் இருக்கோம்!’- டிக் டாக் தடையை அடுத்து நிறுவனத்தின் பதில்

விளம்பரம்
Written by Indo-Asian News Service மேம்படுத்தப்பட்டது: 19 ஏப்ரல் 2019 17:19 IST

சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி, டிக் டாக் செயலிக்குத் தடை விதித்து உத்தரவிட்டது.

டிக் டாக் செயலிக்கு நீதிமன்றம் “இடைக்கால” தடை விதித்திருந்தாலும், அந்த செயலி குறித்த பரபரப்பு அடங்கியதாக தெரியவில்லை. இந்நிலையில், ‘டிக் டாக் செயலியில் தவறு நடப்பதை கண்காணிக்க ஒரு பெரிய குழு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது' என்று செயலியை உருவாக்கிய நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். இந்தியாவில் டிக் டாக் செயலியை சுமார் 12 கோடி பேர் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. டிக் டாக் செயலியில், ‘ஆபாச வீடியோக்கள்' மற்றும் ‘குழந்தைகளை பாதிக்கும் வகையில் உள்ள வீடியோக்கள்' இருப்பதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. ByteDance என்கின்ற சீன நிறுவனத்தால்தான் டிக் டாக் செயலி உருவாக்கப்பட்டது. தற்போது 150 நாடுகளில் 75 மொழிகளில் டிக் டாக் செயலி பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, மத்திய அரசிடமிருந்து கோரிக்கை வந்ததை அடுத்து கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் இந்தியாவில் டிக் டாக் செயலியை நீக்கியுள்ளன. 

Advertisement

இந்நிலையில் டிக் டாக் இந்தியாவின் பொழுதுபோக்குப் பிரிவின் தலைவர் சுமேதாஸ் ராஜ்கோபால், “தற்போது டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்டிருப்பது தற்காலிகத் தடையாகும். சீக்கிரமே அரசிடமிருந்து எங்களுக்கு ஏற்ற பதில் வரும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று நம்பிக்கைத் தெரிவித்தார். 

அவர் மேலும், “டிக் டாக் செயலி தொடர்ந்து செயல்பாட்டில்தான் உள்ளது” என்றும் தகவல் தெரிவித்தார். 

சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி, டிக் டாக் செயலிக்குத் தடை விதித்து உத்தரவிட்டது. இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இதையடுத்து அரசு சார்பில், கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு டிக் டாக் செயலியை நீக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து அந்த செயலி தற்போது தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இது குறித்தான வழக்கு மீண்டும் ஏப்ரல் 22 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. 

Advertisement

ராஜ்கோபால் தொடர்ந்து தற்போதைய பிரச்னை குறித்து பேசுகையில், “டிக் டாக் செயலியில் எந்த மாதிரி வீடியோக்கள் வருகிறது என்பதை கண்காணிக்க ஒரு குழு உள்ளது. அந்த குழு தொடர்ந்து சர்ச்சைக்குரிய விஷயங்களை நீக்கி வருகிறது. கடந்த வாரம் மட்டும் நாங்கள் 60 லட்சம் வீடியோக்களை செயலியில் இருந்து நீக்கியுள்ளோம். டிக் டாக் செயலி அனைவருக்கும் பாதுகாப்பானதாக இருக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்றுள்ளார். 

டிக் டாக் செயலி இதற்கு முன்னர் வங்கதேசம் மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலும் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Tiktok, India, tiktok ban india
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.