உலகில் மிகவும் பிரபலமான ஆப்களில் ஒன்றக இருக்கும் டிக் டாக்கிற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு ரூ. 3.50 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுவதாக டிக் டாக் ஆப்-ஐ உருவாக்கிய நிறுவனமான பைட்-டான்ஸ் தெரிவித்துள்ளது.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பைட்-டான்ஸ் கூறியுள்ளது. டிக் டாக் மீதான தடையால் 250-க்கும் அதிகமானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபாசத்தை ஊக்கப்படுத்துவதாக கூறி பிரபல செயலியான டிக் டாக்கிற்கு தற்காலிக தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதையடுத்து மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்பேரில், ஆப்பிள் மற்றும் ப்ளே ஸ்டோர்களில் டிக் டாக் செயலி நீக்கம் செய்யப்பட்டது.
இதனை எதிர்த்து டிக் டாக்கை உருவாக்கிய நிறுவனமான பைடான்ஸ், உச்ச நீதிமன்றத்தில் வாக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நாளைக்குள் உயர் நீதிமன்ற மதுரை கிளை முடிவு எடுக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் டிக் டாக் மீதான தடை நீக்கப்பட்டதாக கொள்ளப்படும் என்றும் தெரிவித்தது.
இந்த நிலையில்தான் டிக் டாக் தடையால் நாள் ஒன்றுக்கு ரூ. 3.50 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுவதாக பைட் டான்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்