Android, iOS-ல் Dark Mode அம்சத்தைப் பெறும் Spark Email App!

IOS-ல் Spark செயலி மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. Android மற்றும் iOS இரண்டிலும், நீங்கள் கணினி அளவிலான dark mode-ஐ இயக்கியிருந்தால், இயல்பாகவே இது dark mode-ஐ செயல்படுத்தும்.

Android, iOS-ல் Dark Mode அம்சத்தைப் பெறும் Spark Email App!

IOS-க்காக Spark மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது மற்றும் iOS மற்றும் Android இரண்டிலும் Dark Mode ஆதரவைப் பெற்றுள்ளது

ஹைலைட்ஸ்
  • Spark என்பது Android, iOS-ல் பிரபலமான மின்னஞ்சல் செயலியாகும்
  • இப்போது இரு தளங்களிலும் புதிய dark mode-ஐக் கொண்டுள்ளது
  • Spark செயலி இப்போது iPadOS-ஐயும் முழுமையாக ஆதரிக்கிறது
விளம்பரம்

IOS மற்றும் Android-க்கான பிரபலமான மின்னஞ்சல் செயலியாக Spark, புதிய அப்டேடைக் கொண்டுள்ளது. இது செயலிக்கு சில சிறந்த அம்சங்களைக் கொண்டுவருகிறது. இந்த செயலி, iPhone மற்றும் iPad-ல் முழுமையாக மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் அதன் ஆண்ட்ராய்டு பதிப்பு இருண்ட பயன்முறையைச் சேர்க்க சிறிய அப்டேட்டைப் பெற்றுள்ளது. Android மற்றும் iOS இரண்டிலும் Spark ஒரு இலவச பதிவிறக்கமாகும். மேலும், இது Gmail மற்றும் Outlook உள்ளிட்ட பல மின்னஞ்சல் சேவைகளை ஆதரிக்கிறது.

Android பதிப்பிற்கான அப்டேட்களை முதலில் பெறுவோம். Android-க்கான Spark-ல் இப்போது இருண்ட தீம் உள்ளது. கணினி அளவிலான இருண்ட பயன்முறையை செயல்பட்டிருந்தால், ஆண்ட்ராய்டு 10-ஐப் பயன்படுத்துபவர்களுக்கு, Spark இயல்பாகவே இருண்ட பயன்முறையை இயக்கும். மற்றவர்களுக்கு, இருண்ட பயன்முறையை செயல்படுத்த Spark அமைப்புகளில் ஒரு ஆப்ஷன் உள்ளது.

இப்போது iPhone மற்றும் iPad ஆகியவற்றில், நிறைய உற்பத்தித்திறன் மையப்படுத்தப்பட்ட அம்சங்களைத் தவிர, Spark இருண்ட பயன்முறை ஆதரவையும் இந்த அப்டேட் சேர்த்தது. இவற்றில் சிறந்தது தனிப்பயனாக்கக்கூடிய மின்னஞ்சல் செயல்கள். நீங்கள் இப்போது செயலியில் உள்ள toolbar-ஐ தனிப்பயனாக்கலாம் மற்றும் ஒவ்வொரு மின்னஞ்சலுக்கும் ஆறு செயல்களைத் தேர்வுசெய்யலாம். உதாரணமாக, நீங்கள் ஒரு பக்கத்தில் பதில் பொத்தானை (reply button) விரும்பினால், அல்லது toolbar-யில் ஸ்பேமாக மார்க்கைக் காண விரும்பினால், நீங்கள் அதைச் செய்யலாம்.

ஐபாட் பயனர்கள் இந்த Spark-க்கின் பதிப்பில் iPadOS 13-ன் பல அம்சங்களுக்கான ஆதரவைக் காண்பார்கள். Split View, Slide Over மற்றும் multiple windows போன்ற அம்சங்கள் இப்போது ஐபாடிற்கான Spark-க்கில் ஆதரிக்கப்படுகின்றன.

Spark, avatars-க்கும் ஆதரவைச் சேர்க்கிறது. இது மின்னஞ்சல்களுக்கு அடுத்ததாக ஒரு படம் அல்லது ஐகானைச் சேர்க்கிறது. முக்கியமான மின்னஞ்சல்களை விரைவாக அடையாளம் காண இது உங்களுக்கு உதவக்கூடும். பிரபலமான சேவைகளிலிருந்து வரும் மின்னஞ்சல்களுக்கு Spark தானாகவே avatars-களைச் சேர்க்க முடியும், இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று Readdle கூறுகிறது.

App Store அல்லது Google Play மூலம் Spark செயலியை பதிவிறக்கம் செய்யலாம்.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. ஜான் டெர்னஸ் தலைமையில் ஆப்பிளின் ஃபோல்டபிள் ஐபேட், AI சாதனங்கள் மற்றும் டச்ஸ்கிரீன் மேக்புக் அறிமுகத் திட்டம்
  2. விவோ X500 ப்ரோ மேக்ஸ்: 200MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ மற்றும் 50MP LOFIC கேமராவுடன் அறிமுகமாக வாய்ப்பு
  3. அறிமுகத்திற்கு முன் கீக்பெஞ்சில் ஷாவோமி 17T: டைமென்சிட்டி 8500 சிப் மற்றும் 12GB RAM விவரங்கள் கசிந்தன
  4. விவோ X போல்ட் 6-ல் 200MP கேமரா மற்றும் பெரிய பேட்டரி; ஷாவோமி மிக்ஸ் போல்ட் 6 வெளியீட்டுத் தகவல் கசிந்தது
  5. போக்கோ C81x 4G vs லாவா போல்ட் N2 ப்ரோ vs ஐடெல் ஜீனோ 100: இந்தியாவில் விலை மற்றும் சிறப்பம்சங்கள் ஒப்பீடு
  6. உங்கள் ஆண்ட்ராய்டு போனில் அட்வான்ஸ்டு ப்ரொடெக்ஷனை எவ்வாறு இயக்குவது: ஒரு படிப்படியான வழிகாட்டி
  7. ரெட்மி A7 ப்ரோ 4G vs விவோ Y05 4G vs ரியல்மி P4 லைட் 4G: இந்தியாவில் விலை மற்றும் சிறப்பம்சங்கள் முழு ஒப்பீடு
  8. உங்கள் சாம்சங் போன் சீராக இயங்க அதனைத் தானாகவே மறுதொடக்கம் (Restart) செய்வது எப்படி?
  9. ஆண்ட்ராய்டின் நோட்டிஃபிகேஷன் பபிள்ஸ் அம்சத்திற்கான ஆதரவை வழங்கும் பணியில் வாட்ஸ்அப் ஈடுபட்டுள்ளது
  10. ஜியோ யூத் அண்ட் கேமிங் பிளான்: ஸ்னாப்சாட்+, ஃபேன்-கோடு மற்றும் ஜெமினி ப்ரோ அறிமுகம்: விலை, நன்மைகள்
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »