Remove China Apps செயலியானது, பயனர்கள் தங்கள் Android ஸ்மார்ட்போன்களில் உள்ள சீன செயலிகளை நீக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விதிமுறை மீறல்: Remove China Apps செயலி, Google Playல் இருந்து நீக்கம்!
சீன செயலிகளை நீக்கும் Remove China Apps செயலி Google Playயிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. கூகிளின் நடத்தை விதிகளின்படி, ஒரு செயலி மூன்றாம் தரப்பு செயலிகளை அகற்ற பயனர்களை ஊக்குவிக்க முடியாது. அதன் காரணமாக அந்த செயலி நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Remove China Apps செயலியானது, பயனர்கள் தங்கள் Android ஸ்மார்ட்போன்களில் உள்ள சீன செயலிகளை நீக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த மே.17ம் தேதியன்று கூகிள் பிளேயில் வெளியான இந்த செயலி கடந்த வாரம் வெளிச்சத்திற்கு வந்தது. இதைத்தொடர்ந்து, Remove China Apps செயலி கூகிள் பிளேயில் சிறந்த டிரெண்டிங் பயன்பாடாக உருவெடுத்தது. 50 லட்சத்திற்கும் அதிகமானோர் அந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர்.
இந்த வாரத்திலையே, கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்படும், அதிக பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளில் இரண்டாவது செயலியாகும். Remove China Apps செயலி நீக்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, மித்ரான் செயலியும் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டது. சீன எதிர்ப்பு உணர்வுகளை தூண்டியதால், 50 லட்சம் பதிவிறக்கங்களை கொண்ட Remove China Apps செயலி, பிளே ஸ்டோரின் கொள்கைகளை மீறியதாக நீக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் இந்தியா-சீனா இடையிலான எல்லை தகராறு உள்ளிட்ட காரணங்களுக்காக, சீனாவிற்கு எதிரான உணர்வு நாட்டு மக்களிடையே உச்சத்தில் இருக்கும் நேரத்தில் இந்த செயலி குறிப்பாக வந்தது.
Remove China Apps செயலியின் நீக்கம் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் முதலில் தகவல் வெளியிட்டிருந்தது. அதன் பின்னர் செயலியை நீக்குவதற்கான காரணங்கள் குறித்த கூடுதல் விவரங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
இதனிடையே, கூகுள் பிளேஸ்டோரிலிருந்து, Remove China Apps செயலி நீக்கப்பட்டது குறித்து, ஒன் டச் ஆப் லேப்ஸ் தனது ட்விட்டர் பிதிவில் உறுதிப்படுத்தியுள்ளது.
விதிமுறைகளை மீறியதன் காரணமாகவே பிளே ஸ்டோரில் இருந்து Remove China Apps செயலி நீக்கப்பட்டதாக கேட்ஜெட்ஸ் 360க்கு கூகுள் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. எனினும், மேலும் எந்த கருத்துகளையும் தெரிவிக்க கூகுள் மறுத்துள்ளது.
In 2020, will WhatsApp get the killer feature that every Indian is waiting for? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Confirms Second Store in Mumbai Will Open 'Soon'; Reportedly Leases Space for Corporate Office in Chennai
Motorola Signature Goes on Sale in India for the First Time Today: Price, Specifications and Sale Offers
Xiaomi 17T Leak Hints at 6,500mAh Battery, OmniVision OV50E Camera Sensor