சீன அப் மேம்பாட்டாளர்களால் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்ட்ராய்டு அப்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவர்களே இந்த விளம்பர மோசடியில் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப் பகுப்பாய்வு நிறுவனம் 2 மில்லியனுக்கு மேல் கூகுள் பிளே ஸ்டோரில் டவுன்லோட் செய்யப்பட்ட 8 அப்கள் இதில் ஈடுபட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளது.
சீன இணையதள நிறுவனமான சீட்டா மொபைலிலிருந்து 7 அப்களும், மற்றொரு சீன நிறுவனமான கிகா டெக்கிலிருந்து மற்றொரு அப்பும் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளது.
கோச்சாவா அப் பகுப்பாய்வு நிறுவனம் Buzzfeed உடன் பகிர்ந்து கொண்ட தகவலின்படி, இந்த இரு நிறுவனங்களும் பயனாளர்களிடம் அப்கள் கேட்கும் அனுமதியை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டுள்ளது.
சீட்டாவினால் உருவாக்கப்பட்ட கிளீன் மாஸ்டர், சி.எம் ஃபையில் மேனேஜர், சிஎம் லான்சர் 3டி, செக்கியூரிட்டி மாஸ்டர், பேட்டரி டாக்டர், சிஎம் லாக்கர் மற்றும் சீட்டா கீபோர்ட் இதில் உள்ளடங்கும். அப் பிரைன் நிறுவனம் கூறுகையில், கடந்த 30 நாட்களில் 20 மில்லியன் முறை இந்த அப்கள் டவுன்லோட் செய்யப்பட்டுள்ளன.
இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் சி.எம் லான்சர் 3டி அப்பினை கூகுள் பிரமோட் செய்ததாகும். விளம்பர மோசடியில் ஈடுபட்ட மற்ற அப் கிகா கீபோர்ட் ஆகும். இதற்கு கூகுள் பிளே ஸ்டோரில் 60 மில்லியன் மாத வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
இதுகுறித்து ஒருமாத கால விசாரணைக்கு பின் வெளியாகியுள்ள சமீபத்திய அறிக்கையின் படி, 125 ஆண்ட்ராய்டு அப்கள் விளம்பர வருவாய் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் தற்போது கூகுள் தனது பிளே ஸ்டோரிலிருந்து 125 ஆண்ட்ராய்டு அப்களை நீக்க உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்