கம்மி விலையில ஒன்பிளஸ் போனா?! ஜூலையில் வெளியாகிறது ஒன்பிளஸ் இசட்!

ஒன்ப்ளஸ் இசட் வதந்தியான ஒன்பிளஸ் 8 லைட் போன் என்று யூகிக்கப்படுகிறது.

கம்மி விலையில ஒன்பிளஸ் போனா?! ஜூலையில் வெளியாகிறது ஒன்பிளஸ் இசட்!

Photo Credit: Twitter / @MaxJmb

ஹோல்-பஞ்ச் வடிவமைப்பைக் காட்டும் ஒன்பிளஸ் இசின் வெளிப்புறத்தை டிப்ஸ்டர் பகிர்ந்துள்ளார்

ஹைலைட்ஸ்
  • ஒன்பிளஸ் எக்ஸ்-க்கு பிறகு நிறுவனம் மிட்ரேஞ்ச் போன்களைக் கொண்டுவருகிற
  • ஒன்பிளஸ் இசட் ஒரு ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது
  • இந்த போனில் மீடியாடெக் செயலி இருக்கலாம்
விளம்பரம்

ஒன்பிளஸ், ஜூலை மாதத்தில் ஸ்மார்ட்போன்களை ஒப்பீட்டளவில் குறைந்த விலையில் கொண்டு வரக்கூடும். ஒன்பிளஸ் 8 லைட் அறிமுகம் செய்யப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், சமீபத்திய சமூக ஊடக பதிவு ஒன்று புதிய மலிவான போனின் பெயர் ஒன்பிளஸ் இசட் என்று தெரியவந்துள்ளது.

மேக்ஸ் ஜே என்ற நபர் ஒன்பிளஸ் இசின் டீஸரை வெளியிட்டுள்ளார். புதிய ஒன்பிளஸ் போனின் அம்சங்கள் எதுவும் தெரியவில்லை என்றாலும், இந்த போன் ஜூலை மாதம் சந்தைக்கு வரும் என்று அவர் கூறினார். ட்விட்டரில் வெளியிடப்பட்ட படம் உண்மை என்றால், ஒன்பிளஸ் இசட் ஒரு ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும்.

ஒன்பிளஸ் 8 சீரிஸின் அறிமுகத்தின் போது OnePlus 8 Lite சந்தையில் வரும் என்று கேள்விப்பட்டது. இந்த போன் சில மாதங்களில் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய போனின் பெயர் ஒன்பிளஸ் இசட் என்று அறிமுகப்படுத்தப்படும் என்று சமீபத்திய அறிக்கை கூறுகிறது.

OnePlus இசட், OnePlus 8 மற்றும் OnePlus 8 Pro-வை விட மிகக் குறைந்த விலையில் வரலாம். ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ முன்பதிவு இந்த வாரம் இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 8-ன் விலை ரூ.41,999-ல் தொடங்குகிறது. நீங்கள் முன்பதிவு செய்தால், உங்களுக்கு ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கும்.

சமீபத்தில் வெளியான மற்றொரு அறிக்கை, ஒன்பிளஸ் 8 லைட்டில் 6.4 இன்ச் டிஸ்ப்ளே இருக்கும் என்பது தெரிந்ததே, விவரக்குறிப்புகளை வெளிப்படுத்தியது. டிஸ்ப்ளேவுக்கு மேலே ஒரு ஹோல்-பஞ்ச் வடிவமைப்பு இருக்கும். ஒன்பிளஸ் இசட் மீடியா டெக் செயலியைப் பயன்படுத்தலாம். ஒன்பிளஸ் முதன்முறையாக மீடியாடெக் செயலியைப் பயன்படுத்தப் போகிறது.


Will OnePlus 8 series be able to take on iPhone SE (2020), Samsung Galaxy S20 in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

#சமீபத்திய செய்திகள்
  1. Huawei Watch GT 6 Pro, GT 6: 21 நாள் பேட்டரி, IP69 ரேட்டிங் – இந்தியா விலை & அம்சங்கள்!
  2. OnePlus 15R, Pad Go 2 இந்திய அறிமுகம்: தேதி, அம்சங்கள் விவரம்!
  3. Oppo A6x: 6500mAh பேட்டரி, Dimensity 6300 – முழு விவரம்!
  4. 200MP கேமரா, 8000mAh பேட்டரி! HONOR 500 Pro-வில் Snapdragon 8 Elite – வெறித்தனமான அம்சங்களுடன் அறிமுகம்
  5. OnePlus ரசிகர்களே! உங்க 15R-ஆ இதுதான்! Snapdragon 8 Gen 5 சிப்செட்டோட புதிய Ace 6T போன்
  6. மொபைல்ல இல்ல, காருக்குள்ள ரே-டிரேசிங்! Dimensity P1 Ultra சிப்செட் – காருக்கான AI சக்தியை கொண்டுவந்த MediaTek
  7. 200MP, 7000mAh பேட்டரி... இனி சார்ஜ் பண்ற கவலையே இல்லை! Realme 16 Pro-வோட மிரட்டலான ஸ்பெக்ஸ் லீக்
  8. Phone 3 யூசர்களுக்கு தீபாவளி ட்ரீட்! Nothing OS 4.0 ஸ்டேபிள் அப்டேட் ரிலீஸ்—கிட்டத்தட்ட 8 புது வசதிகள்
  9. 8000mAh பேட்டரி கொண்ட OnePlus போனா? Ace 6T மாடலின் அசத்தல் வண்ணங்கள் ரிலீஸுக்கு முன்னாடியே வெளியீடு
  10. Oppo K15 Turbo Pro: Snapdragon 8 Gen 5, 8000mAh பேட்டரி லீக்.
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »