OnePlus Pad Go 2 ஆனது அமெரிக்காவின் FCC அமைப்பின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. இதன் முக்கிய விவரங்கள் மற்றும் இந்திய அறிமுகத் தேதி வெளியீடு
ஸ்மார்ட்போன் மார்க்கெட்டுல மட்டும் இல்லாம, டேப்லெட் மார்க்கெட்டுலையும் OnePlus இப்போ வேகமா வளர்ந்துட்டு இருக்காங்க. அந்த வரிசையில, அவங்களுடைய புது டேப்லெட்டான OnePlus Pad Go 2 லான்ச் பண்றதுக்கு முன்னாடியே பெரிய நியூஸ் வந்திருக்கு. அதாவது, இந்த டேப்லெட்டுக்கு அமெரிக்காவோட FCC (Federal Communications Commission) அமைப்போட ஒப்புதல் கிடைச்சிருக்கு!
இந்த FCC ஒப்புதல் கிடைச்சது மூலமா, இந்த டேப்லெட் சீக்கிரமே அமெரிக்கால லான்ச் ஆகும்ங்கிறது உறுதி. இந்த லிஸ்டிங்லதான் நமக்கு முக்கியமான சில தகவல்களும் கிடைச்சிருக்கு.
இந்த OnePlus Pad Go 2 (OPD2504 மாடல் நம்பர்) என்ன ஆப்பரேட்டிங் சிஸ்டத்துல இயங்கப் போகுதுன்னு பார்த்தா, அதுதான் செம்ம சர்ப்ரைஸ்! இது Android 16-ஐ அடிப்படையாகக் கொண்ட OxygenOS 16-ல இயங்கப் போகுதாம்! இப்போதைக்கு மார்க்கெட்ல அதிகமா Android 15 போன்கள் வந்துகிட்டு இருக்கிறப்போ, இவங்க அடுத்த ஜெனரேஷன் OS-ஐ கொண்டு வர்றது பெரிய விஷயம்.
அடுத்த முக்கியமான அப்டேட் என்னன்னா, இந்த டேப்லெட் 5G சப்போர்ட் உடன் வருது! இதுல 2G, 3G, 4G, மற்றும் 5G நெட்வொர்க் சப்போர்ட் இருக்குன்னு FCC லிஸ்டிங் உறுதிப்படுத்தியிருக்கு. அதுமட்டுமில்லாம, கனெக்டிவிட்டிக்கு Wi-Fi 6 மற்றும் Bluetooth BR, EDR, BLE சப்போர்ட்டும் இருக்கு. இவ்வளவு ஃபாஸ்ட்டான நெட்வொர்க் சப்போர்ட் இருக்கிறதால, ஆஃபீஸ் வேலையா இருந்தாலும் சரி, ஆன்லைன் கிளாஸா இருந்தாலும் சரி, ரொம்ப ஸ்மூத்தா இருக்கும்.
சரி, இந்த டேப்லெட் இந்தியாவுக்கு எப்போ வரும்? கம்பெனியே இதுக்கான அறிவிப்பை வெளியிட்டுட்டாங்க. டிசம்பர் 17, 2025 அன்று இந்தியாவில் OnePlus 15R ஸ்மார்ட்போனுடன் சேர்த்து இந்த OnePlus Pad Go 2-ஐயும் லான்ச் பண்ணப் போறாங்க! Amazon India, Flipkart மற்றும் OnePlus-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்துல இதுக்கான பேஜஸ் எல்லாம் இப்போ Live-ல இருக்கு! அதே தேதியில ஐரோப்பாவுலயும் இந்த டேப்லெட் மற்றும் OnePlus Watch Lite-ம் லான்ச் ஆகுது.
ஸ்பெக்ஸ் பத்தி கம்பெனி டீஸ் பண்ணிருக்கிறத பார்த்தா, இது 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் வேரியன்ட்ல வரும். அதுமட்டுமில்லாம, இந்த டேப்லெட்க்காகவே பிரத்யேகமா OnePlus Pad Go 2 Stylo-ன்னு ஒரு ஸ்டைலஸ் பென்னையும் அறிமுகப்படுத்துறாங்க. இதுல 4096 லெவல்ஸ் பிரஷர் சென்சிட்டிவிட்டி இருக்குதாம். டிசைன்ல பின்னாடி ஒரு சிங்கிள் கேமரா மட்டும் இருக்கும்னு டீஸர் சொல்லுது. Shadow Black மற்றும் Purple கலர் ஆப்ஷன்ஸ்ல இந்த டேப்லெட் கிடைக்கும்.
கடைசியா, இந்த டேப்லெட்ல நிறைய AI அம்சங்கள் மற்றும் புதிய Productivity Tools இருக்கும்னு OnePlus சொல்லி இருக்காங்க. இது ஆண்ட்ராய்டு 16-உடன் வரப்போறதால, கண்டிப்பா புது விதமான சாஃப்ட்வேர் அனுபவம் கிடைக்கும்னு எதிர்பார்க்கலாம்!
மொத்தத்துல, OnePlus Pad Go 2 ஒரு தரமான அப்கிரேடா, அதுவும் லேட்டஸ்ட் Android 16, 5G சப்போர்ட் உடன் வர்றது டேப்லெட் மார்க்கெட்டுல ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கும்! இந்த டேப்லெட்டை நீங்க வாங்குவீங்களா இல்லையான்னு கமெண்ட்ஸ்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்