OnePlus 8-ன் ஆரம்ப விலை 699 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.53,200) ஆகும். OnePlus 8 Pro-வின் ஆரம்ப விலை 899 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.68,400) ஆகும்.
ஒன்பிளஸ் 8 ப்ரோ குவாட் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது
ஒன்பிளஸின், புதிய ஒன்பிளஸ் 8 புரோ மற்றும் ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகியுள்ளது. புதிய ஒன்பிளஸ் போன்கள் 5 ஜி ஆதரவைக் கொண்டுள்ளன. இது ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளேவுடன் வருகின்றன. ஒன்பிளஸ் 8 ப்ரோ குவாட் ரியர் கேமரா அமைப்பையும், ஒன்பிளஸ் 8 மூன்று பின்புற கேமராக்களையும் கொண்டுள்ளது.
OnePlus 8 Pro-வின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை 899 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.68,400) ஆகும். அதன் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை 999 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.76,000) விலைக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இந்த போன் Glacial Green, Onyx Black மற்றும் Ultramarine Blue (12 ஜிபி + 256 ஜிபி மட்டுமே) கலர் ஆப்ஷன்களில் வருகிறது.
OnePlus 8-ன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை 699 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.53,200) ஆகும். அதன் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் 799 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.60,800) விலையைக் கொண்டுள்ளது. இந்த போன், Glacial Green மற்றும் Interstellar Glow (12 ஜிபி + 256 ஜிபி மட்டுமே) கலர் ஆப்ஷன்களில் வருகிறது.
ஒன்பிளஸ் வார்ப் சார்ஜ் 30 வயர்லெஸ் சார்ஜரின் விலை 69.95 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.5,300) ஆகும்.
ஒன்பிளஸ் 8 ப்ரோ, டூயல்-சிம் (நானோ) ஸ்லாட்டைக் கொண்டுள்ளது. இது, ஆக்ஸிஜன்ஓஎஸ் உடன் Android 10-ல் இயக்குகிறது. இந்த போன் 6.78 அங்குல QHD + (1440x3168 பிக்சல்கள்) திரவ AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த போன் ஆக்டா கோர் Qualcomm Snapdragon 865 SoC-யால் இயக்கப்படுகிறது. இது 8 ஜிபி மற்றும் 12 ஜிபி எல்பிடிடிஆர் 5 ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் 8 ப்ரோ குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது 48 மெகாபிக்சல் முதன்மை சோனி ஐஎம்எக்ஸ் 689 சென்சார், 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார், 48 மெகாபிக்சல் மூன்றாம் நிலை சென்சார் ஆகியவை உள்ளது. மேலும், கேமரா அமைப்பில் 5 மெகாபிக்சல் “கலர் ஃபில்டர்” கேமரா சென்சார் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 3x ஹைப்ரிட் சப்போர்ட் மற்றும் 30/60fps-ல் 4K வீடியோ ரெக்கார்டிங்கை வழங்குகிறது. முன்பக்கத்தில், 16 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 471 சென்சார் உள்ளது.
OnePlus 8 ப்ரோவில், 128 ஜிபி மற்றும் 256 ஜிபி யுஎஃப்எஸ் 3.0 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வருகிறது. இதை விரிவுபடுத்த முடியாது. இந்த போனில், இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உள்ளது. ஒன்ப்ளஸ் 8 ப்ரோவில், வார்ப் சார்ஜ் 30 டி (5 வி / 6 ஏ) மற்றும் வார்ப் சார்ஜ் 30 வயர்லெஸ் ஆதரவுடன், 4,510 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இந்த போன் 165.3x74.35x8.5 மிமீ அளவு மற்றும் 199 கிராம் எடை கொண்டது.
![]()
ஒன்பிளஸ் 8, டூயல்-சிம் (நானோ) ஸ்லாட்டைக் கொண்டுள்ளது. இது, ஆக்ஸிஜன்ஓஎஸ் உடன் ஆண்ட்ராய்டு 10-ல்இயக்குகிறது. இந்த போன், 6.55 அங்குல முழு எச்டி + (1080x2400 பிக்சல்கள்) திரவ அமோல்ட் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC உள்ளது. இது 8 ஜிபி மற்றும் 12 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
போனில், டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. அதில், 48 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 586 முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் மற்றும் 16 மெகாபிக்சல் மூன்றாம் நிலை சென்சார் ஆகிய உள்ளன. இந்த போன், 30/60fps-ல் 4K வீடியோ பதிவை ஆதரிக்கிறது. முன்பக்கத்தில், 16 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 471 சென்சார் உள்ளது.
ஒன்பிளஸ் 8, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி யுஎஃப்எஸ் 3.0 இருவழி ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வருகிறது. இதை விரிவுபடுத்த முடியாது. இந்த போனில், இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உள்ளது. இதில் வார்ப் சார்ஜ் 30 டி (5 வி / 6 ஏ) ஐ ஆதரவுடன் 4,300 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இந்த போன் 160.2x72.9x8.0 மிமீ அளவு மற்றும் 180 கிராம் எடை கொண்டது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy S26 Ultra Camera, Charging Specifications Leaked Alongside Exynos 2600 Details