மைக்ரோசாப்டின் தலைமை சட்ட அதிகாரி பிராட் ஸ்மித், பிரைவஸி மற்றும் மனித உரிமைகளின் மீதுள்ள ஆபத்துக்கள் காரணமாக முக அங்கீகார தொழில்நுட்பத்தை ஒழுங்குபடுத்த வேண்டுமென என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
பிராட் ஸ்மித், முக அங்கீகார தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்த அனைத்து தரப்பு மற்றும் வல்லுனர் குழுவின் கருத்துகளைக் கேட்டு விதிகளை வகுக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என கூறியுள்ளார்.
முக அங்கீகார தொழில்நுட்பம் பல்வேறு முக்கியமான மனிதி உரிமை, பிரைவஸி பிரச்சனைகளை எழுப்புவதாக ஸ்மித் ஒரு பிளாக் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் ”அரசாங்கம் கடந்த மாதம் முழுவதும் நீங்கள் எங்கெல்லாம் சென்றீர்கள் என்பதை உங்களுடைய அனுமதி, அரசாங்க கண்காணிக்க முடியும் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா” என்று அதன் ஆபத்து குறித்து கேள்வி எழுப்பும் வகையில் கூறியுள்ளார். "பேச்சு சுதந்திரத்தை சாராம்சமாக கொண்டிருக்கும் ஒரு அரசியல் பேரணியில் கலந்து கொண்ட அனைவரின் தகவல்களும் அடங்கிய தரவை கற்பனை செய்து பாருங்கள்".
இது வியாபாரிகள், அவர்களுடைய பார்வையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் க்ரெடிட் மதிப்பெண்கள், க்ரெடிட் வழங்கும் முடிவுகள், அல்லது வேலை வாய்ப்புகளைப் பற்றிய முடிவுகளை எடுக்க என்ன பார்க்கிறார்கள் என்பதை பயன்படுத்தி கண்கானிப்பதற்கான சாத்தியங்களை உருவாக்கும்.
அவர் புனைவு திரைப்படங்களான "மைனாரிட்டி ரிப்போர்ட்", "எனிமி ஆஃப் தி ஸ்டேட்" மற்றும் ஜார்ஜ் ஆர்வெல்லின் டிஸ்டோபியன் கதையான “1984” ஆகியவற்றில் வருகின்றன சூழ்நிலைகள் நிஜமாவதற்கான சாத்தியம் இருப்பதாகக் கூறுகிறார்.
"இந்த பிரச்சனைகள், இந்த தொழில்நுட்பங்களை தயாரிக்கும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பொருப்புகளை அதிகரிக்கிறது” என ஸ்மித் கூறினார்.
"எங்களுடைய பார்வையில், அவர்கள் ஆக்கப்பூர்வமான அரசாங்க ஒழுங்குமுறைகள் மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பயன்களைக் கொண்ட விதிமுறைகளின் வளர்ச்சிக்கு அழைப்பு விடுகின்றனர்".
மைக்ரோசாப்ட் மற்றும் பிற தொழில்நுட்ப நிறுவனங்கள் பல ஆண்டுகளாக டிஜிட்டல் புகைப்படங்களை ஒருங்கினைப்பது உள்ளிட்ட பணிகளுக்கு முக அங்கீகார தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருக்கின்றனர்.
ஆனால் மனிதர்களின் முகங்களை அடையாளம் கானும் கணிணியின் திறன்கள், எங்கும் நிறைந்திருக்கும் கேமராக்களின் வளர்ச்சி மற்றும் இணைய க்ளவுட்டில் சேமித்து ரியல் டைமில் அடையாளங்களை கண்டுபிடிக்கும் கணிணி திறன் ஆகியவற்றோடு அதிவேகமாக வளர்ந்து வருகிறது.
தொழில்நுட்பங்கள் காணாமல் போன குழந்தைகளை, தெரிந்த தீவிரவாதிகளை கண்டுபிடிப்பது போன்ற நல்ல விஷயங்களுக்கு பயன்பட்டாலும், தவறான விஷயங்களுக்கு பயன்படுத்தப்படுகிற வாய்ப்பும் இருக்கவே செய்கிறது.
“ஒரு நிறுவனம் தன்னுடைய தயாரிப்புகளுக்கு அரசாங்க ஒழுங்குமுறைகள் கேட்பது அசாத்தியமாக தோன்றலாம், ஆனால் ஆக்கப்பூர்வமான ஒழுங்குமுறைகளால் வாடிக்கையாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் ஆரோக்கியமான சூழலை உருவாக்கியுள்ள சில சந்தைகளும் இருக்கின்றன” என்றார் ஸ்மித்.
“முக அங்கீகார தொழில்நுட்பத்தில் உள்ள பரந்த சமூக பாதிப்புகள் மற்றும் தவறான பயன்பாட்டிற்கான சாத்தியங்கள் ஆகியவற்றை கவனத்தில் கொண்டால் இந்த தொழில்நுட்பத்திற்கு ஆக்கப்பூர்வமான அரசாங்க ஒழுங்குமுறைகள் கொண்டு வர வேண்டும் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது”.
ஸ்மித் கருத்து படி, இந்த தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடுகள் பற்றிய கவலை மைக்ரோசாப்ட் நிறுவனத்தை கவனமாக செயல்பட தூண்டியிருக்கிறது.
"இது, இந்த சேவையில் உள்ள அதிகமான மனித உரிமை மீறல்கள் பிரச்சனைகள் காரணமாக, இந்த சேவையை பயன்படுத்தக் கோரிய பல்வேறு வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளை நிராகரிக்க எங்களை நிர்பந்தித்துள்ளது” என்றார் ஸ்மித்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்