விராட், பிரியங்காவின் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவிற்கான கட்டணம் எவ்வளவு தெரியுமா?

விராட், பிரியங்காவின் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவிற்கான கட்டணம் எவ்வளவு தெரியுமா?

Photo Credit: Twitter/ Priyanka Chopra

பிரியங்கா 43 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார்

ஹைலைட்ஸ்
  • ஹாப்பர் தலைமையகம் ‘2019 இன்ஸ்டாகிராம் பணக்கார பட்டியலை' வெளியிட்டது
  • கோலிஒவ்வொரு பதிவிற்கும் 196,000 டாலர்கள் வசூலிக்கிறார்
  • இந்த பட்டியலில் இணைந்த இந்தியர்கள் விராட், பிரியங்கா மட்டுமே
விளம்பரம்

ஏராளமான இந்திய பிரபலங்கள் தங்கள் ரசிகர்களுடன் தொடர்புடன் இருக்க இன்ஸ்டாகிராமை ஒரு தளமாக பயன்படுத்திக் கொண்டிருக்க, இந்திய நட்சத்திரங்களில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி ஆகியோர் மட்டுமே இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ள ‘2019 இன்ஸ்டாகிராம் பணக்கார பட்டியலில்' இணைந்துள்ளன்ர். இன்ஸ்டாகிராமில் தங்கள் விளம்பர பதிவுகள் மூலம் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்ற மதிப்பீடு அடிப்படையில் வெளியான இந்த பட்டியலில், டிவி ஆளுமை மற்றும் அமெரிக்க தொழிலதிபரான கைலி ஜென்னர் (Kylie Jenner) முதலிடத்தை பிடித்துள்ளார். ஸ்பான்சர் செய்யப்பட்ட ஒவ்வொரு இன்ஸ்டாகிராம் பதிவிற்கும் ஜென்னர் 1.266 மில்லியன் டாலர்கள் (சுமார் ரூ. 8.74 கோடி) வசூலிப்பதாக இந்த இங்கிலாந்து நிறுவனம் தெரிவித்துள்ளது. அவரைத் தொடர்ந்து பாடகி அரியானா கிராண்டே (Ariana Grande) 996,000 டாலர் (சுமார் ரூ .6.87 கோடி) வசூலிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஹாப்பர் தலைமையகம் வெளியிட்டுள்ள பட்டியலின்படி, பிரியங்கா சோப்ரா (Priyanka Chopra) ஒரு ஸ்பான்சர் செய்யப்பட்ட இன்ஸ்டாகிராம் பதிவிற்கு 271,000 டாலர்கள் (சுமார் ரூ. 1.87 கோடி) வசூலிக்கிறார். 37 வயதான இந்த பாலிவுட் சூப்பர் ஸ்டார், சமூக ஊடக மேடையில் 43 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார் மற்றும் 2019 இன்ஸ்டாகிராம் பணக்கார பட்டியலில் 19 வது இடத்தை பிடித்துள்ளார்.

மறுபுறம், இந்த பட்டியலில் 23 வது இடத்தில் உள்ள கிரிக்கெட் நட்சத்திரமான விராட் கோலி (Virat Kohli), இன்ஸ்டாகிராமில் ஸ்பான்சர் செய்யப்பட்ட ஒவ்வொரு பதிவிற்கும் 196,000 டாலர்கள் (சுமார் ரூ. 1.35 கோடி) வசூலிக்கிறார்.

ஜென்னரை அடுத்து, இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பெற்ற கிராண்டே, தனது கணக்கின் மூலம் 158.4 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட ஒவ்வொரு விளம்பர பதிவிற்கும் 996,000 டாலர்களை பெறுகிறார்.

தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் 172.8 மில்லியனுக்கும் மேலான பின்தொடர்பவர்களுடன் ஜென்னர் மற்றும் கிராண்டேவை விட அதிக பின்தொடர்பவர்கள் எண்ணிக்கையை கொண்ட கால்பந்து நட்சத்திர வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo), ஒரு பதிவிற்கு 975,000 டாலர்கள் (சுமார் ரூ. 6.73 கோடி) பணத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். இந்த கால்பந்து நட்சத்திரத்தைத் தொடர்ந்து ஜென்னரின் சகோதரியும் அமெரிக்க நடிகையுமான கிம் கர்தாஷியன் (Kim Kardashian) ஒரு பதிவிற்கு 910,000 டாலர்கள் (சுமார் ரூ .6.28 கோடி) வசூலிக்கிறார்.

கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராமில் அதிக சம்பளம் வாங்கும் இரண்டாவது பிரபலமாக இருந்த நடிகையும் பாடகியுமான செலினா கோம்ஸ் (Selena Gomez) இப்போது ஹாப்பர் தலைமையக பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு மாறியுள்ளார். அவர் ஒரு பதிவிற்கு 886,000 டாலர்கள் (சுமார் ரூ .6.11 கோடி) வசூலிப்பதாகக் கூறப்படுகிறது, இது கடந்த ஆண்டு 800,000 டாலர்களாக (சுமார் ரூ. 5.52 கோடி) இருந்தது.

ஒரு பதிவில் ஹாப்பர் தலைமையகம் இந்த பட்டியல் "உள் தரவு, ஏஜென்சி மற்றும் பொது தகவல்களை" அடிப்படையாகக் கொண்டது என்று குறிப்பிட்டுள்ளது.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »