கூகுள் பிளேயின் விடுமுறை கால இலவச கிரேடிட்

விடுமுறை கால பரிசாக கூகுள் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கூகுள் பிளேயின் விடுமுறை கால இலவச கிரேடிட்

Photo Credit: ரெட்டிட்

குறிபிட்ட பயனாளிகளுக்கு மட்டும் கூகுள் இலவச கிரேடிட் வழங்குகிறது

ஹைலைட்ஸ்
  • குறிபிட்ட பயனாளிகளுக்கு மட்டுமே இந்த சலுகை
  • மஞ்சள் நிற பேனர் இந்த இலவச கிரேடிட் குறிக்கும்
  • ரெட்டிட் பயன்படுத்துவோர் இதை பதிவித்துள்ளனர்
விளம்பரம்

விடுமுறை கால பரிசாக கூகுள் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறிபிட்ட பயனாளிகளுக்கு கூகுள் பிளே ஸ்டோரானது இலவச கிரேடிட் வழங்குகிறது. முன்னர் பிளே ஸ்டோரில் வாங்கிய ஆப்களை கருத்தில் கொண்டே இந்த இலவச பயனாளிகள் யார் யார் என்பதை கூகுள் தீர்மானிக்கிறது. இப்படி தேர்ந்து எடுக்கபட்ட இலவச பயனாளிகளுக்கு அவர்களது ஆண்டிராய்டு பிளே ஸ்டோரில் மஞ்சள் நிற பேனர் மூலம் அவர்களது இலவச கிரேடிட் அறிவிக்கபடுகிறது. அப்படி உள்ள அந்த மஞ்சள் பேனரை கிளிக் செய்யும் போது, பல விதிமுறைகளுக்கு உட்பட சொல்லி கேட்கும்.

கூகுள் பிளேயின் வரவேற்பில், சில பயனாளிகளுக்கு மஞ்சள் நிற பேனர் இருக்கும். ஒவ்வொரு பயனாளிக்கும் ஒவ்வொரு கிரேடிட் பயன் இருக்கும். சிலருக்கு , ஆப்கள் மற்றும் விளையாட்டுகளுக்கு 5 டாலர் செலவு செய்ய கேட்கும். அப்போது அந்த மேற்கூறிய மஞ்சள் நிற பேனரை கிளிக் செய்யும் போது, அவர்களது அக்கவுண்ட்க்கு அந்த கிரேடிட் பணம் சென்று விடும். சிலருக்கு இந்த கிரேடிட்கள் 20 டாலர் மேல் மதிப்புள்ள ஆப்கள் வாங்கும் போது தான் உபயோகிக்க முடியும். 10 முதல் 30 டாலர் , 2 முதல் 10 டாலர் என பல இலவச கிரேடிட்கள் இருக்கின்றன.

இந்த இலவச கிரேடிட் குறித்து விதிமுறைகள், அந்த மஞ்சள் நிற பேனரை கிளிக் செய்யும் போது வரும். இந்த விதிமுறைகளை முழுவதும் படிப்பது நல்லது. ஒவ்வொருவரின் டீல் குறித்த விளக்கங்களும் இதில் அடங்கும். இந்த இலவச கிரேடிட்டை உறுதி செய்த பின், அதனை நேவிகேதர் கீழ் உள்ள அக்கவுண்ட் பிரிவில் காணலாம். ரெட்டிட் பயன்படுத்துவோர் இந்த சலுகையை குறித்து பதிவிட்டு வருகிறார்கள்.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. ஜான் டெர்னஸ் தலைமையில் ஆப்பிளின் ஃபோல்டபிள் ஐபேட், AI சாதனங்கள் மற்றும் டச்ஸ்கிரீன் மேக்புக் அறிமுகத் திட்டம்
  2. விவோ X500 ப்ரோ மேக்ஸ்: 200MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ மற்றும் 50MP LOFIC கேமராவுடன் அறிமுகமாக வாய்ப்பு
  3. அறிமுகத்திற்கு முன் கீக்பெஞ்சில் ஷாவோமி 17T: டைமென்சிட்டி 8500 சிப் மற்றும் 12GB RAM விவரங்கள் கசிந்தன
  4. விவோ X போல்ட் 6-ல் 200MP கேமரா மற்றும் பெரிய பேட்டரி; ஷாவோமி மிக்ஸ் போல்ட் 6 வெளியீட்டுத் தகவல் கசிந்தது
  5. போக்கோ C81x 4G vs லாவா போல்ட் N2 ப்ரோ vs ஐடெல் ஜீனோ 100: இந்தியாவில் விலை மற்றும் சிறப்பம்சங்கள் ஒப்பீடு
  6. உங்கள் ஆண்ட்ராய்டு போனில் அட்வான்ஸ்டு ப்ரொடெக்ஷனை எவ்வாறு இயக்குவது: ஒரு படிப்படியான வழிகாட்டி
  7. ரெட்மி A7 ப்ரோ 4G vs விவோ Y05 4G vs ரியல்மி P4 லைட் 4G: இந்தியாவில் விலை மற்றும் சிறப்பம்சங்கள் முழு ஒப்பீடு
  8. உங்கள் சாம்சங் போன் சீராக இயங்க அதனைத் தானாகவே மறுதொடக்கம் (Restart) செய்வது எப்படி?
  9. ஆண்ட்ராய்டின் நோட்டிஃபிகேஷன் பபிள்ஸ் அம்சத்திற்கான ஆதரவை வழங்கும் பணியில் வாட்ஸ்அப் ஈடுபட்டுள்ளது
  10. ஜியோ யூத் அண்ட் கேமிங் பிளான்: ஸ்னாப்சாட்+, ஃபேன்-கோடு மற்றும் ஜெமினி ப்ரோ அறிமுகம்: விலை, நன்மைகள்
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »