டோல் கட்டணங்களைச் செய்வதற்கு ரேடியோ அதிர்வெண் அடையாள தொழில்நுட்பத்தை FASTag பயன்படுத்துகிறது
பயனர்கள் தங்கள் FASTag கணக்குகளை விரைவாக ரீசார்ஜ் செய்ய உதவும் முயற்சியில், Google Pay ஒரு புதிய Unified Payments Interface (UPI) அம்சத்தை சேர்த்துள்ளதாக திங்களன்று அறிவித்தது. இது FASTag கணக்குகளை கூகுள் பே செயலியுடன் இணைக்கவும், அவர்களின் கட்டணங்களை ரீசார்ஜ் செய்யவும், கண்காணிக்கவும் அனுமதிக்கும். நிறுவனத்தின் கூற்றுப்படி, பயனர்கள் தங்கள் FASTag கணக்குகளை ரீசார்ஜ் செய்ய, தங்கள் கூகுள் பே செயலியை திறக்க வேண்டும், "Bill Payments" பிரிவின் கீழ் FASTag வகையைத் தேட வேண்டும் மற்றும் அவர்களின் FASTag-ஐ வழங்கிய வங்கியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
"அடுத்த திரையில், உங்கள் வாகன எண்ணை உள்ளிட்டு உங்கள் வங்கிக் கணக்கில் பணம் செலுத்துங்கள். பயனர்கள் ஒரு பொத்தானைத் தட்டினால் ஆதரவு வங்கிகளால் வழங்கப்படும் FASTags-க்கான FASTag கணக்கு நிலுவைகளையும் சரிபார்க்கலாம்" என்று நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
FASTag என்பது ஒரு மின்னணு கட்டண வசூல் முறையாகும். இது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் இயக்கப்படுகிறது. இது ப்ரீபெய்ட் அல்லது சேமிப்புக் கணக்கிலிருந்து நேரடியாகவோ அல்லது நேரடியாக டோல் உரிமையாளரிடமிருந்தோ கட்டணம் செலுத்துவதற்கு ரேடியோ அதிர்வெண் அடையாள தொழில்நுட்பத்தைப் (Radio Frequency Identification technology) பயன்படுத்துகிறது.
இந்தியாவின் முக்கிய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இயல்பாகவே புதிய வாகனங்களில் FASTag RFID குறிச்சொல்லை வழங்குகின்றன. இருப்பினும், சமீபத்தில் ஒரு புதிய கார் அல்லது ஜீப்பை வாங்கியவர்களில் நீங்கள் இல்லையென்றால், பல்வேறு மூலங்களிலிருந்து ஒரு FASTag-ஐ வாங்கலாம்.
இந்திய நெடுஞ்சாலை மேலாண்மை நிறுவனம் வெளியிட்டுள்ள ட்வீட்டின் படி, அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும், 23 சான்றளிக்கப்பட்ட வங்கிகள், பிராந்திய போக்குவரத்து அலுவலகங்கள் (ஆர்டிஓக்கள்) மற்றும் போக்குவரத்து மையங்கள் ஆகியவற்றில் டோல் பிளாசாக்களில் அமைக்கப்பட்டுள்ள புள்ளி-விற்பனை (point-of-sale - POS) இடங்கள் மூலம் FASTag கிடைக்கிறது. FASTag வாங்குவதற்கான எளிதான வழிகளில் ஒன்று, அருகிலுள்ள வங்கி வங்கிகளான ஆக்சிஸ் வங்கி, எச்.டி.எஃப்.சி வங்கி அல்லது கருர் வைஸ்யா வங்கி போன்றவற்றைப் பார்வையிடுவது ஆகும். கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்கள் அடங்கிய வாகன வகுப்பு 4-க்கு, ஆக்சிஸ் வங்கி, எச்.டி.எஃப்.சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி அல்லது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) போன்ற வங்கிகளின் இணையதளங்கள் மூலம் ஆன்லைனில் FASTag வாங்க முடியும். ஏர்டெல் பேமென்ட்ஸ் வங்கி, அமேசான் மற்றும் பேடிஎம் நிறுவனங்களும் ஆன்லைனில் FASTag விற்பனை செய்கின்றன. மேலும், ஆன்லைனில் FASTag வாங்குவதற்கு நீங்கள் சில கேஷ்பேக்கைப் பெறலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்