செயலியின் பதிப்பு 48.0.001_RC03-க்குள் புதிய Google Pay தங்க பரிசளிப்பு விருப்பம் காணப்பட்டது.
Google Pay டெவலப்பர்கள் புதிய பரிசு அம்சத்தில் வேலை செய்கிறார்கள்
இந்த ஆண்டின் தொடக்கத்தில், கூகுள் பே (Google Pay) செயலியின் மூலம் தங்கத்தை விற்பனை மற்றும் வாங்கும் திறனை கூகுள் அறிவித்தது. இந்த செயல்பாட்டைக் கொண்டுவருவதற்காக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட உலோக மற்றும் சுரங்க சேவை வழங்குநரான MMTC-PAMP உடன் இது கூட்டுசேர்ந்தது. இப்போது, tech giant புதிய அம்சத்தை சேர்க்க, பயனர்கள் தங்கத்தை மற்றவர்களுக்கு பரிசளிக்க அனுமதிக்கும். இந்த புதிய Google Pay தங்க பரிசளிப்பு விருப்பம் செயலியின் குறியீட்டிற்குள் காணப்பட்டது. மேலும், இது வளர்ச்சி மற்றும் சோதனைக்கு எவ்வாறு செல்கிறது என்பதன் அடிப்படையில் தொடங்கப்படலாம் அல்லது தொடங்கப்படாமல் போகலாம்.
XDA டெவலப்பர்கள் இந்த புதிய தங்க பரிசு விருப்பத்தை Google Pay v48.0.001_RC03-க்குள் கண்டறிந்துள்ளனர். இந்த புதிய பதிப்பில் புதிய சரங்கள் உள்ளன என்று அறிக்கை கூறுகிறது. இது, கூகுள் ஒரு அம்சத்தில் செயல்படுகிறது என்பதைக் குறிக்கிறது, இது பயனர்கள் ஒருவருக்கொருவர் தங்கத்தை பரிசளிக்க அனுமதிக்கும். இந்த அம்சம் எப்போது உருவாகும் அல்லது அது எவ்வாறு செயல்படும் என்பதில் தெளிவு இல்லை. குறிப்பிட்டுள்ளபடி, பணி தொடங்கியது என்று குறியீடு அறிவுறுத்துகிறது. ஆனால், டெவலப்பர்கள் வளர்ச்சி அல்லது சோதனை கட்டங்களில் ஏதேனும் தவறு நடந்தால், அதில் plug on இழுக்க முடிவு செய்யலாம்.
ஏப்ரல் மாதத்தில் செயலிக்குள் தங்கம் வாங்குவது மற்றும் விற்பது அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இது கூகுள் பே (Google Pay) பயனர்களுக்கு 99.99 சதவீதம், 24 காரட் தங்கத்தை வாங்க உதவியது. எந்தவொரு மதிப்பிலும் வாங்கிய தங்கமும் MMTC-PAMP-யால் அவர்கள் சார்பாக பாதுகாப்பான பெட்டகங்களில் சேமிக்கப்படும் என்று கூகுள் குறிப்பிடுகிறது. கூகுள் பே (Google Pay) செயலியில் காண்பிக்கப்படுவது போல, பயனர்கள் எந்த நேரத்திலும் தங்கத்தை சமீபத்திய விலையில் வாங்கலாம், ஒவ்வொரு சில நிமிடங்களுக்கும் புதுப்பிக்கலாம்.
கூகுள் பே (Google Pay) கடந்த ஆண்டில் நாட்டில் மிகவும் பிரபலமாகிவிட்டது. செப்டம்பரில் அதன் வருடாந்திர 'Google for India' நிகழ்வின் ஐந்தாவது பதிப்பில், Google Pay, PhonePe-வை விட 67 மில்லியன் மாதாந்திர செயலில் உள்ள பயனர்களை (monthly active users - MAUs) அடைந்ததாக கூகுள் அறிவித்தது. செப்டம்பர் மாதத்திற்கு முந்தைய 12 மாதங்களில், ஆண்டுக்கு 110 பில்லியன் டாலர் மதிப்புள்ள பரிவர்த்தனைகளை இயக்கி, நூறாயிரக்கணக்கான ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் வணிகர்களுடன், இது 3 மடங்கு வளர்ச்சியடைந்துள்ளதாக tech giant கூறுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
BGMI Air Set to Launch in India on December 10; Closed Beta Testing to Begin Later This Month
WhatsApp Rolls Out Recent Media Suggestions Feature for Android and iOS Users: Report