கூகுள் பே (Google Pay) இந்தியாவில் ஒரு பகுதி செயலிழப்பை எதிர்கொள்கிறது. பல பயனர்கள், செயலி திடீரென தங்கள் வங்கிக் கணக்குகளை அகற்றிவிட்டு, பரிவர்த்தனைகளைத் தடுக்கிறது என்று தெரிவித்துள்ளனர். பல பயனர்கள் தங்கள் புகார்களை சமூக ஊடக தளங்களில் பதிவிட்டிருந்தாலும், இந்த பிரச்சினை ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதாகத் தெரிகிறது. கூகுள் பே, இந்தியாவில் மிகவும் பிரபலமான மொபைல் கட்டண தளங்களில் ஒன்றாகும். கடந்த ஆண்டு செப்டம்பர் நிலவரப்படி, இந்த செயலியில் நாட்டில் 67 மில்லியனுக்கும் அதிகமான மாதாந்திர active users உள்ளனர். கூகுள் பே செயலி, நாட்டில் யுனிஃபைட் பேமென்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (Unified Payments Interface - UPI) அடிப்படையிலான டிஜிட்டல் பேமெண்டுகளின் வளர்ச்சியில் பெருமளவில் பங்களித்ததாக நம்பப்படுகிறது.
ட்விட்டரில் பயனர் அறிக்கையின்படி, கூகுள் பே செயலி திடீரென வங்கி கணக்கு விவரங்களை அகற்றிவிட்டது. மேலும், பயனர்கள் தங்களின் தற்போதைய வங்கிக் கணக்குகளை மீண்டும் இணைக்க அனுமதிக்காது. பட்டியலிடப்பட்ட அனைத்து வங்கி ஆப்ஷன்களையும் காண்பிப்பதற்குப் பதிலாக, இந்த செயலி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவை (SBI) மட்டுமே வழங்குகிறது என்று பல பயனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
@GooglePay getting no another bank option when adding bank to account. Only @TheOfficialSBI bank is showning in the list. Please resolve it as soon as possible @GoogleIndia pic.twitter.com/RHSo2SV7Fo
— Lakhan chivadshetti (@lakhan3010) February 4, 2020
@GooglePay is down for me, showing no saved accounts :(
— Kabeer Ghanchi (@kabeertweets) February 4, 2020
2 bank accounts in my @GooglePay account were automatically deleted.
— Anoop Srinivas Bhat???????? (@Anoopsri) February 4, 2020
Now, I thought it could be a glitch and reinstalled the app. It doesn't even allow for verification.
This is very bad. Resolve issue ASAP pic.twitter.com/tW1XiqghzW
@GooglePayIndia facing issues with the app. what's the support process?
— The Last Washello (@humanprojector) February 4, 2020
இந்த சிக்கல் Google Pay செயலியின் Android பதிப்பிற்கு வரையறுக்கப்பட்டதா அல்லது ஐபோன் பயனர்களையும் பாதித்ததா என்பது தெளிவாக இல்லை. எங்கள் குழுவில் உள்ள சில பயனர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த சிக்கல் அனைத்து Google Pay பயனர்களையும் பாதிக்காது என்ற உண்மையை கேஜெட்ஸ் 360-யால் சரிபார்க்க முடிந்தது. இருப்பினும், இந்த பிரச்சினை தேர்ந்தெடுக்கப்பட்ட பிராந்தியத்திற்கு தடைசெய்யவில்லை. மேலும், இந்தியாவில் பல்வேறு Google Pay கணக்குகளுக்கு உள்ளது என்று தெரிகிறது.
கேஜெட்ஸ் 360 Google India-வுக்கு தற்போதைய பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்துள்ளது. மேலும், நிறுவனம் பதிலளிக்கும் போது இந்த கட்டுரையை புதுப்பிக்கும்.
கடந்த ஆண்டு செப்டம்பரில், கூகுள் பே ஃபோன்பேவை (PhonePe) விஞ்சியது மற்றும் இந்தியாவில் 67 மில்லியன் மாதாந்திர active users-ன் எண்ணிக்கையை எட்டியது. இந்த செயலி கடந்த 12 மாதங்களில் மட்டும் மூன்று மடங்கு வளர்ந்து 110 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 7,82,800 கோடி) பரிவர்த்தனைகளை ஆண்டு அடிப்படையில் இயக்கியது, என்று தேடல் நிறுவனம் தனது வருடாந்திர 'Google for India' நிகழ்வின் ஐந்தாவது பதிப்பில் கூறியது.
கூகுள் பே ஆரம்பத்தில் இந்தியாவில் கூகுள் டெஸ் (Google Tez) என்று அழைக்கப்பட்டது. இருப்பினும், 2018-ஆம் ஆண்டில் கூகுள் இந்தியாவில் மற்றும் உலகளாவிய சந்தைகளில் ஒருங்கிணைந்த வர்த்தகத்தை வழங்குவதற்காக இந்த செயலியை 'கூகுள் பே' என மறுபெயரிட்டது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்