ப்ளே ஸ்டோரில் 10 கோடி டவுண்லோடுகளை கடந்த கூகுள் மீட்ஸ்! 50 நாட்களில் 2 மடங்காக அதிகரிப்பு

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 9 ஜூலை 2020 11:46 IST
ஹைலைட்ஸ்
  • Google Meet saw over 50 million downloads in under three months
  • Meet was made free for all by Google back in May
  • Boost in downloads seen due to coronavirus-induced lockdowns

தற்போது வரையில்  ஒரே நேரத்தில் 250 பேர் கூகுள் மீட் மூலமாக கான்பரன்ஸ் நடத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

கூகுள் நிறுவனத்தின் வீடியோ சாட் ஆப் கூகுள் மீட், ப்ளே ஸ்டோரில் 100 மில்லியன்  டவுண்லோடுகளை அதாவது  10 கோடி டவுண்லோடுகளை கடந்துள்ளது. கடந்த  50 நாட்களில்  மட்டும் 2 மடங்காக டவுன்லோடு அதிகரித்துள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.

கூகுள் மீட் ஆப்புக்கு போட்டியாக ஜூன் மற்றும் மைக்ரோசாப்ட் டீம்ஸ் ஆப்புகள் உள்ளன. கொரோனா பாதிப்பு காரணமாக உலக நாடுகள் பெரும்பாலானவை முடங்கிப் போயுள்ளன.  இந்த சூழலில் மக்கள் வீடியோ மூலம் ஆலோசனை நடத்துவதற்காக வீடியோ கான்பரன்சிங் ஆப்புகளை அதிக எண்ணிக்கையில் டவுன்லோடு செய்து வருகின்றனர்.

கூகுள் மீட் ஆப்பினை ஜிமெய்ல் அக்ககவுன்ட் உள்ள எவரும் இலவசமாக பயன்படுத்தலாம். இதன் மூலம் வீடியோ கால் செய்வது எளிதாக இருப்பதால் அதிக எண்ணிக்கையில் பயனர்கள் டவுன்லோடு செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் ஜூம் ஆப்தான் வீடியோ கான்பரன்சிங் நடத்துபவர்களால் அதிக எண்ணிக்கையில்  பயன்படுத்தப்படுகிறது. இதனை விட சிறப்பான ஆப்சன்களை கொண்டதாக கூகுள் மீட் மாற்றப்பட்டு வருகிறது. 

தற்போது வரையில்  ஒரே நேரத்தில் 250 பேர் கூகுள் மீட் மூலமாக கான்பரன்ஸ் நடத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 


Why do Indians love Xiaomi TVs so much? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி F70 புரோ 5G விலை, வெளியீட்டு தேதி மற்றும் அம்சங்கள் அறிவிப்பு
  2. சோனி WF-1000XM6 உடன் சோனி 1000X தி கலெக்‌ஷன் DSEE அல்டிமேட் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள்
  3. ஒன்பிளஸ் N6x இந்தியாவில் 7,000mAh பேட்டரி, 13-மெகாபிக்சல் பின்புற கேமராவுடன் அறிமுகம்: விலை, விவரக்குறிப்புகள்
  4. இந்தியாவில் eSIM மற்றும் பிசிக்கல் சிம்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
  5. இந்தியாவில் PS5 ஸ்டாண்டர்ட் எடிஷன் விலையை சோனி ரூ. 15,000 உயர்த்தியுள்ளது
  6. ஆகஸ்ட் 1 முதல் இந்தியாவில் நத்திங் ஃபோன் (4a) விலை ரூ. 3,000 உயரும் என தகவல்
  7. ஆசஸ் பேட் இந்திய விலை, ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வகைகள் அறிவிப்பு; ஆகஸ்ட் 6 முதல் விற்பனை தொடங்குகிறது
  8. சாம்சங்கின் 50MP கேமரா கொண்ட மடிக்கக்கூடிய ஃபோனுக்கு ₹19,000 தள்ளுபடி; சமீபத்திய சலுகையைப் பாருங்கள்
  9. AI உதவியுடன் இன்டர்வியூவில் வென்று ₹1.5 கோடி வேலை பெற்ற நபர்; தனது உத்தியைப் பகிர்ந்துள்ளார்!
  10. ஜியோ ஹோம் 2 மாத திட்டத்தில் 1 மாதம் இலவசம்: 100Mbps இன்டர்நெட், 12 OTT ஆப்ஸ்கள் இலவசம்!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.