குறைவான அளவு கோடிங்கை வைத்து, தொழில் ரீதியான செயலிகளை உருவாக்க கூகுள் நிறுவனம் ஆப் மேக்கர் என்ற டூலை உருவாகியுள்ளது. இந்த டூலை அனைவரும் பயன்படும் வகையில் உருவாக்கியிருக்கிறார்கள். இதன் பீட்ட வெர்ஷ்ன் வெளியாகி ஒன்றரை ஆண்டுகள் கழித்து முழு வெர்ஷன் வெளியாகியுள்ளது.
“ஆப் மேக்கர் மூலம் செயலிகளில் எளிதாக உருவாக்கவும், மாற்றம் செய்யவும் முடியும்.” என்கிறார் ஆப் மேக்கரின் பிராடக்ட் மேனேஜர் ரெக்காவ்.
புதிதாக வெளியாகியுள்ள முழு வெர்ஷனில், குறைந்த கோட் பயன்படுத்தி செயலிகளை மாற்றும் வகையில், ரெடிமேட் டெம்பிளேட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், சீக்குவெல் கிளவுட் வசதியும் உள்ளது. இதன் மூலம் செயலிகளை உருவாக்கும் நேரம் குறையும்.
ஆப் மேக்கர் பயன்படுத்தும் டெவலெப்பர்களுக்கு கூகுளின் 40 சேவைகளை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த ஆப் மேக்கர், தற்போது ஜி.சூட் பிஸினஸ் மற்றும் எண்டெர்பிரைசஸ் பயன்படுத்தும் டெவலப்பர்கள் பயன்படுத்த முடியும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்