தகவல் திருட்டு எதிரொலி: 400 ஆப்ஸ்களை அதிரடியாக நீக்கியது ஃபேஸ்புக்

கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிகா மோசடி வெளியானது முதலாக, ஃபேஸ்புக் செயலிகளில் தகவல் பகிர்வது தொடர்பான தனது விதிகளை மாற்றியமைத்துள்ளது

தகவல் திருட்டு எதிரொலி: 400 ஆப்ஸ்களை அதிரடியாக நீக்கியது ஃபேஸ்புக்
விளம்பரம்

பயனர்களின் அந்தரங்கத் தகவல்களை தவறான முறையில் பகிர்ந்துகொண்டது தொடர்பான விவகாரத்தில் 400க்கும் மேற்பட்ட செயலிகளை (apps) ஃபேஸ்புக் தற்காலிகமாக நீக்கியுள்ளது. மேலும் இதில் உண்மையைக் கண்டறியும் விசாரணையும் தொடர்ந்து வருகிறது.

“செயலிகளைக் கட்டமைத்த டெவலப்பர்களின் மீது எழுந்த ஐயத்தின் காரணமாகவும் மக்கள் அவர்களிடம் பகிர்ந்த தகவல்கள் எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்ற ஐயத்தின் காரணமாகவும் இச்செயலிகளைத்ட் தற்காலிகமாக நீக்கியுள்ளோம். இவை தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றன” என்று ஃபேஸ்புக்கின் தயாரிப்புப் பங்காண்மைப் பிரிவின் துணைத் தலைவர் ஆர்க்கிபாங் வலைப்பதிவில் கூறியுள்ளார்.

டானல்ட் டிரம்பின் 2016ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் பரப்புரைக்குப் பணியாற்றிய கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் ஃபேஸ்புக்கிலுள்ள 87 மில்லியன் பயனர்களின் தகவல்களைத் திருடியிருக்கலாம் என்று ஃபேஸ்புக் ஒப்புக்கொண்டது.

கேம்பிரிட்ஜ் அனாலிடிகா (Cambridge Analytica) தகவல் பாதுகாப்பு மோசடி குறித்த சர்ச்சைக்குப் பிறகு மார்ச்சில் ஆப்ஸ்க்கு என்று தனிப்பிரிவை ஃபேஸ்புக் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

ஆர்க்கிபாங் சமீபத்திய வலைப்பதிவில், “மைபர்சனாலிட்டி செயலி (myPersonality app) ஃபேஸ்புக்கின் ஆய்வுக்கு ஒப்புக்கொள்ளாததாலும்; அவர்கள் ஆய்வாளர்களுடனும் நிறுவனங்களுடனும் தனிநபர் தகவல்களைப் பகிர்ந்துகொண்டதாலும் முடக்கப்பட்டுள்ளது. 2007இல் தொடங்கப்பட்ட இது 2012 வரை தீவிரமாக இயங்கி வந்துள்ளது. இதில் தகவல்களைப் பகிர்ந்த 40 இலட்சம் மக்களிடமும் இதுபற்றி அறிவிக்க ஃபேஸ்புக் முடிவுசெய்துள்ளது. தொடர்ந்து செயலிகளை ஆய்வுசெய்து, தேவையான மாற்றங்களை எங்கள் தளத்தில் அறிமுகப்படுத்துவோம். மக்களின் அந்தரங்கத் தகவல்களைப் பாதுகாக்க தேவையான அனைத்தையும் செய்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிகா மோசடி வெளியானது முதலாக, ஃபேஸ்புக் செயலிகளில் தகவல் பகிர்வது தொடர்பான தனது விதிகளை மாற்றியமைத்துள்ளது. முன்னதாக கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிகா சர்ர்சையால் அமெரிக்கப் பேரவையில் ஆஜராகி, தன்னிடம் சரமாரியாகக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் விளக்கமளித்தார்.

ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறியதிலும் (Brexit) கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகாவின் பங்கு உள்ளதா என்று ஐயம் எழுப்பப்பட்டதும்; தனிநபர் தகவல்களை கசிந்ததற்காக ஐரோப்பிய யூனியனிடம் சக்கர்பெர்க் மன்னிப்பு கோரினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. ஜான் டெர்னஸ் தலைமையில் ஆப்பிளின் ஃபோல்டபிள் ஐபேட், AI சாதனங்கள் மற்றும் டச்ஸ்கிரீன் மேக்புக் அறிமுகத் திட்டம்
  2. விவோ X500 ப்ரோ மேக்ஸ்: 200MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ மற்றும் 50MP LOFIC கேமராவுடன் அறிமுகமாக வாய்ப்பு
  3. அறிமுகத்திற்கு முன் கீக்பெஞ்சில் ஷாவோமி 17T: டைமென்சிட்டி 8500 சிப் மற்றும் 12GB RAM விவரங்கள் கசிந்தன
  4. விவோ X போல்ட் 6-ல் 200MP கேமரா மற்றும் பெரிய பேட்டரி; ஷாவோமி மிக்ஸ் போல்ட் 6 வெளியீட்டுத் தகவல் கசிந்தது
  5. போக்கோ C81x 4G vs லாவா போல்ட் N2 ப்ரோ vs ஐடெல் ஜீனோ 100: இந்தியாவில் விலை மற்றும் சிறப்பம்சங்கள் ஒப்பீடு
  6. உங்கள் ஆண்ட்ராய்டு போனில் அட்வான்ஸ்டு ப்ரொடெக்ஷனை எவ்வாறு இயக்குவது: ஒரு படிப்படியான வழிகாட்டி
  7. ரெட்மி A7 ப்ரோ 4G vs விவோ Y05 4G vs ரியல்மி P4 லைட் 4G: இந்தியாவில் விலை மற்றும் சிறப்பம்சங்கள் முழு ஒப்பீடு
  8. உங்கள் சாம்சங் போன் சீராக இயங்க அதனைத் தானாகவே மறுதொடக்கம் (Restart) செய்வது எப்படி?
  9. ஆண்ட்ராய்டின் நோட்டிஃபிகேஷன் பபிள்ஸ் அம்சத்திற்கான ஆதரவை வழங்கும் பணியில் வாட்ஸ்அப் ஈடுபட்டுள்ளது
  10. ஜியோ யூத் அண்ட் கேமிங் பிளான்: ஸ்னாப்சாட்+, ஃபேன்-கோடு மற்றும் ஜெமினி ப்ரோ அறிமுகம்: விலை, நன்மைகள்
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »