X-ல் Following Feed-ஐ Grok AI வரிசைப்படுத்தும்: X Premium விலை குறைப்பு

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 28 நவம்பர் 2025 23:16 IST
ஹைலைட்ஸ்
  • Grok AI ஆனது X-ன் 'Following' Feed-ல் போஸ்ட்களின் தரவரிசையை மாற்றுகிறது
  • பொருத்தமான, பயனர் ஈடுபாடு மற்றும் யார் பின்தொடர்கிறார்கள் என்பதை AI கணக்க
  • X Premium விலை இந்தியாவில் முதல் மாதத்திற்கு ₹89 ஆக குறைக்கப்பட்டுள்ளது

Grok AI: 'Following' feed-ல் உள்ளடக்கக் கண்டறிதலை மேம்படுத்துகிறது

Photo Credit: Reuters

நம்ம Elon Musk இருக்காரே, ஒரு இடத்துல சும்மா இருக்கவே மாட்டார்! அடிக்கடி X (முன்னாள் ட்விட்டர்)-ல புதுசு புதுசா ஏதாவது பண்ணிட்டே இருப்பாரு. இப்போ வந்திருக்கிற ஒரு பெரிய அப்டேட் என்னன்னா, X தளத்துல இருக்குற Following Feed-ல வர்ற போஸ்ட்டுகளை இனிமேல் Grok AI தான் வரிசைப்படுத்தப் போகுது!
பொதுவா, X-ல ரெண்டு வகையான ஃபீட் (Feed) இருக்கும். ஒண்ணு 'For You' Feed, இன்னொன்னு 'Following' Feed. 'For You' Feed-ல AI பயன்படுத்தி, உங்களுக்குப் பிடிச்ச போஸ்ட்களைக் காட்டுவாங்க. ஆனா, 'Following' Feed-ல நீங்க பின்தொடரும் (Follow) நண்பர்கள் போடும் போஸ்ட்டுகள், காலவரிசைப்படி (Chronological Order) தான் இதுவரைக்கும் வரும். இப்போ அந்த சிஸ்டமை Musk மாத்திட்டார்.

நேரத்தை வச்சு வரிசைப்படுத்தப்படாது

இனிமேல், உங்க 'Following' Feed-ல போஸ்ட்டுகள் வெறுமனே நேரத்தை வச்சு வரிசைப்படுத்தப்படாது. அதுக்கு பதிலா, Grok AI களத்தில் இறங்கிருக்கு! இந்த Grok AI என்ன பண்ணும்னா, நீங்க யாரையெல்லாம் ஃபாலோ பண்றீங்க, கடந்த காலத்துல எந்த மாதிரியான போஸ்ட்களுக்கு அதிகமா ரெஸ்பான்ஸ் பண்ணிருக்கீங்க (லைக், கமெண்ட்), எந்த மாதிரியான கன்டென்ட் உங்களுக்கு ரொம்ப பொருத்தமானதுன்னு (Relevant) எல்லாத்தையும் அனலைஸ் பண்ணும்.

இந்த அனலைஸ் முடிவை வச்சு, நீங்க ஃபாலோ பண்றவங்க போட்டிருந்தாலும், உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச, மற்றும் சுவாரசியமான போஸ்ட்டுகளை முதல்ல கொண்டு வந்து காட்டப் போகுது Grok AI. Musk அவருடைய X போஸ்ட்லயே, "புதுசா அப்டேட் பண்ணி பாருங்க! உங்க Following Feed-ல வர்ற போஸ்ட்டுகளை Grok தான் ரேங்க் பண்ணும்"னு சொல்லிருக்காரு.

அதாவது, நீங்க மிஸ் பண்ணவே கூடாத முக்கியமான போஸ்ட்டுகளை இனிமேல் Grok AI ஸ்கேன் பண்ணி முன்னாடி கொண்டு வந்து நிறுத்தும். ஆனா, இந்த மாற்றம் சில பேருக்குப் பிடிக்காம போகலாம். ஏன்னா, அவங்களுக்கு காலவரிசைப்படி போஸ்ட்டுகளைப் பார்க்குறதுதான் பிடிக்கும். கவலை வேண்டாம்! Musk அவர்களே, "நீங்க விரும்பினா, ஃபில்டர் பண்ணாத, காலவரிசைப்படியான ஃபீட்க்கு (Unfiltered Chronological Feed) மறுபடியும் மாறிக்கலாம்"னு சொல்லி, ஒரு ஆப்ஷனையும் கொடுத்திருக்காரு.

X Premium சப்ஸ்கிரிப்ஷன் விலை

இன்னொரு முக்கியமான அப்டேட் என்னன்னா, X Premium சப்ஸ்கிரிப்ஷன் விலையை இந்தியால தற்காலிகமா குறைச்சிருக்காங்க! இந்த சப்ஸ்கிரிப்ஷன் லான்ச் ஆகி மூணு வருஷம் ஆகுறத கொண்டாடுற விதமா, ஒரு மாசத்துக்கு ₹427 இருந்த Premium பிளான் விலையை, முதல் மாசத்துக்கு வெறும் ₹89-ஆ குறைச்சிருக்காங்க! அதே மாதிரி, Premium+ பிளான் விலையும் ₹2,570-ல இருந்து ₹890-ஆ குறைஞ்சிருக்கு! இந்த ஆஃபர் டிசம்பர் 2 வரைக்கும்தான் இருக்குன்னு சொல்லிருக்காங்க. இந்த Grok AI ரேங்கிங் மற்றும் X Premium விலை குறைப்பு பத்தி உங்க கருத்து என்னன்னு கமெண்ட்ஸ்ல சொல்லுங்க

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Grok, X Premium Price in India, X Premium, Elon Musk

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. இனி ஃபோல்டபிள் போன்லயும் தத்ரூபமான போட்டோஸ்! சாம்சங் Z Fold 8-ன் மிரட்டலான கேமரா சிறப்பம்சங்கள் கசிந்தது
  2. ஆப்பிள், குவால்காமுக்கு செம டஃப்! சாம்சங்கின் 2nm எக்ஸினோஸ் 2600 வந்தாச்சு
  3. 8.9mm தடிமன்.. 10 நாள் பேட்டரி! ஒன்பிளஸ் வாட்ச் லைட் (OnePlus Watch Lite) லான்ச் ஆகிடுச்சு
  4. 200MP கேமரா.. ஆனா சைஸ் ரொம்ப சின்னது! OPPO Reno15 Pro Mini - இதோட டிசைனை பார்த்தா அசந்துடுவீங்க
  5. வந்துவிட்டது புது Oppo Pad Air 5: 2.8K Display, 10,050mAh Battery & 5G Support
  6. அமேசான் பே-வில் அதிரடி! ₹5,000 வரை பேமெண்ட் பண்ண இனி பின் நம்பர் போட வேணாம்
  7. 7000mAh பேட்டரி.. 200MP கேமரா.. ரியல்மி 16 ப்ரோ+ (Realme 16 Pro+) ரகசியங்கள் அம்பலம்
  8. இனி ஆப் ஸ்டோர்ல எதை தேடினாலும் விளம்பரமா தான் இருக்கும்! ஆப்பிள் எடுத்த அதிரடி முடிவு! கடுப்பில் யூசர்கள்
  9. 5G சப்போர்ட்.. 12.1-இன்ச் டிஸ்ப்ளே! வந்துவிட்டது புது OnePlus Pad Go 2! விலையை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க
  10. 7,400mAh பேட்டரியா? ஒன்பிளஸ் வரலாற்றிலேயே மிகப்பெரிய பேட்டரியுடன் வந்துவிட்டது OnePlus 15R
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.