கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துகொள்ள, கைகளை கழுவுவது அவசியம். இதை நினைவூட்டும் வகையில் Samsung 'ஹேண்ட் வாஷ்' என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
வைரஸை எதிர்கொள்ள, மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இந்த முயற்சியில் தற்போது சாம்சங்கும் இணைந்துள்ளது. சாம்சங் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்-பெங்களூர் (எஸ்.ஆர்.ஐ-பி) ஒரு 'ஹேண்ட் வாஷ்' செயலியை உருவாக்கியுள்ளது. சாம்சங்கின் கேலக்ஸி வாட்சில் உள்ள செயலி, பயனர்களுக்கு கை கழுவுதல் பற்றி நினைவூட்டுகிறது. இந்த செயல்பாடு குறைந்தது 20 வினாடிகள் நீடிக்கும் என்பதை, செயலி உறுதி செய்கிறது. இந்த செயலி, கேலக்ஸி ஸ்டோரிலும் கிடைக்கிறது.
"COVID-19 பரவுவதைத் தடுக்க, அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் (World Health Organization) பரிந்துரைத்துள்ளது. 20 விநாடிகள் கை கழுவினால் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்" என்று சுகாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
"'ஹேண்ட் வாஷ்' செயலி, பயனர்கள் தினசரி கழுவும் வழக்கத்தை உள்ளுணர்வாக கண்காணிக்க அனுமதிக்கிறது. "குழாயை திறந்து சோப்பைப் பயன்படுத்துவதற்கு ஐந்து வினாடிகள், 20 வினாடிகள் கை கழுவலுக்கானவை. இந்த வழிமுறையை தவறவிட்டால், செயலி பயனர்களுக்கு அறிவிக்கும்" என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த செயலி, ஒவ்வொரு முறையும் பயனர் கழுவத் தொடங்கும்போது, நேரத்தைக் கண்காணித்து, கைக் கழுவிய 25 விநாடிகளுக்குப் பிறகு கருத்துக்களையும் வழங்குகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்