CoWin -20 செயலி தற்போது சோதனையில் உள்ளது, இது கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் வழியாக வெளியிடப்படும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மத்தியில், CoWin-20 செயலி உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது
நாவல் கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் தொடர்ந்து பரவி வருவதால், குடிமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளும் நோக்கில் மத்திய அரசு மொபைல் செயலியில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. ஒரு அறிக்கையின்படி, தற்போது அதன் சோதனைக் கட்டத்தில் இருக்கும் CoWin-20 செயலியானது, குடிமக்கள் கோவிட்-19 பாதிப்புக்குள்ளான இடங்களுக்கு பயணிக்காமல் இருப்பதை உறுதி செய்வதோடு, தொற்றுநோயைப் பற்றி அவர்கள் சுற்றியுள்ள இடங்களைக் கண்காணிப்பதும் ஆகும். பின்னர் இந்த நோய் கண்டறியப்பட்ட பயனர்கள் தாங்கள் செய்த சமீபத்திய தொடர்புகள் அனைத்தையும் கண்காணிக்க இந்தப் செயலி உதவும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் டிராக்கர் செயலியை எப்போது, எப்படி வெளியிட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. தற்போது, கூகுள் பிளே ஸ்டோரில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இந்திய அரசின் மற்றொரு கொரோனா வைரஸ் கண்காணிப்பு செயலி கிடைக்கிறது.
நியூஸ் 18-ன் படி, இந்த செயலியை NITI Aayog உருவாக்கி வருகிறது. இறுதியில் Google பிளே ஸ்டோர் மற்றும் Apple ஆப் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்யப்படும். CoWin -20 செயலி ஏற்கனவே ஒரு APK மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மத்தியில் உருவாக்கப்படுள்ளது என்று அறிக்கை மேலும் கூறியுள்ளது.
CoWin -20 செயலியின் பீட்டா பதிப்பையும் தி நெக்ஸ்ட் வெப் (The Next Web) மதிப்பீடு செய்தது, இது புளூடூத் வழியாக கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடர்பாக பயனர்களின் தரவை அரசாங்கம் பெறும் என்று கண்டறிந்தது. "நீங்கள் பாதிக்கப்பட்ட நபரின் தூரத்திலிருந்து ஆறு அடிக்குள்ளேயே இருக்கிறீர்களா என்பதைச் சரிபார்க்க இந்த செயலி புளூடூத்தை நம்பியிருக்கும்" என்று அறிக்கை கூறியது.
பயனரின் இருப்பிட வரலாற்றைக் கண்டறிய செயலியில் வரைபடம் போன்ற அம்சம் இருக்கும் என்று அறிக்கை மேலும் கூறியுள்ளது. "MAP 19-க்கு நன்றி, நான் பார்வையிட்ட ஒவ்வொரு இடத்தையும், என்னிடமிருந்து 5 அடி தூரத்தில் உள்ள ஒவ்வொரு நபரையும் கடந்த 14 நாட்களில் கண்டுபிடித்தேன்" என்று அறிக்கை கூறியது.
பீட்டா பதிப்பில் இருக்கும் சில அம்சங்கள் CoWin -20 செயலியின் இறுதி பதிப்பில் சேர்க்கப்படாமல் இருக்கலாம் என்றும் தி நெக்ஸ்ட் வெப் சந்தேகிக்கிறது. செயலியில் உள்ள பயனரின் தனியுரிமையும் கேள்விக்குள்ளாக்கப்பட்டாலும், தி நெக்ஸ்ட் வெப் அறிக்கை, இந்த செயலி முதலில் "இருப்பிடத் தரவை எப்போதும் அணுக அனுமதி" கேட்கும் என்று பரிந்துரைத்தது. "தரவுகளை குறியாக்கம் செய்வதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது" என்று அது மேலும் கூறியது.
வதந்தி செயலியின் பல அம்சங்கள் வெளிவராதபோது, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) கொரோனா வைரஸ் கண்காணிப்பு செயலியைக் கொண்டு வந்துள்ளது. கொரோனா கவாச் (Corona Kavach) என அழைக்கப்படும் இந்த செயலி, கூகுள் பிளே ஆப் ஸ்டோரில் கிடைக்கிறது, மேலும் இது "இந்தியாவில் இருக்கும் கோவிட்-19 வழக்குகள் பற்றிய பகுப்பாய்வுகளை நடத்துகிறது மற்றும் தகவல்களை வழங்குகிறது."
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இந்தியா தற்போது நாடு தழுவிய ஊரடங்கில் உள்ளது. இந்தியா, தொற்றுநோயால் வியாழக்கிழமை வரை 13 இறப்புகளைக் கண்டது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Moto G57 Power Launched in India With 7,000mAh Battery, 50-Megapixel Sony LYT-600 Camera