Photo Credit: WhatsApp
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது WhatsApp Calling Effects, Animations பற்றி தான்.
புதிதாக Calling Effects, Animations மற்றும் Stickers வசதியை அறிமுகப்படுத்துகிறது WhatsApp நிறுவனம். புதிய ஆண்டை முன்னிட்டு குறுஞ்செய்தி மற்றும் அழைப்பு அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் இது வருகிறது. குறிப்பிட்ட காலத்திற்கு, WhatsApp பயனர்கள் வீடியோ அழைப்புகளின் போது புத்தாண்டு தீம் மூலம் புதிய அழைப்பு Animation ஆப்ஷன்களை பயன்படுத்திக் கொள்ள முடியும். புதிய அனிமேஷன்கள் மற்றும் ஸ்டிக்கர்கள் பண்டிகை கொண்டாட்டத்துக்கு ஏற்றவாறு வெளியிடப்பட்டுள்ளது. மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான மற்றொரு செயலியான Instagram சமீபத்தில் 2024 Collage என அழைக்கப்படும் வரையறுக்கப்பட்ட நேர அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
WhatsApp பயனர்கள் இப்போது விடுமுறை நாட்களில் வீடியோ அழைப்புகளை செய்யலாம். புதிய ஆண்டை நினைவுகூரும் வகையில் பண்டிகை பின்னணிகள், வடிப்பான்கள் மற்றும் Effectகளை பயன்படுத்தலாம். இது புதிய அனிமேஷன் வசதிகளை கொண்டுவருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பார்ட்டி எமோஜிகளைப் பயன்படுத்தி யாராவது ஒரு செய்திக்கு பதில் அனுப்பும்போது, அனுப்புபவர் மற்றும் பெறுபவர் இருவருக்கும் ஒரு கான்ஃபெட்டி அனிமேஷன் தோன்றும்.
இதே பிளா புதிய ஸ்டிக்கர்களையும் WhatsApp அறிமுகப்படுத்தியது. புத்தாண்டு தீமுடன் பொருந்தக்கூடிய அவதார் ஸ்டிக்கர்களுடன் கூடிய புத்தாண்டு ஈவ் (NYE) ஸ்டிக்கர் பேக் கிடைக்கிறது. இந்த அம்சங்கள் விடுமுறை வாழ்த்துக்களை வேடிக்கையாகவும், ஊடாடும் விதத்திலும் தெரிவிக்க சிறந்த வழி என்று WhatsApp கூறுகிறது.
இந்த அம்சங்கள் சமீபத்திய வாரங்களில் WhatsApp அப்டேட்களில் சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த வாரம், நாய்க்குட்டி காதுகள், நீருக்கடியில் மற்றும் கரோக்கி மைக்ரோஃபோன் உள்ளிட்ட வீடியோ அழைப்புகளுக்கு இன்னும் அதிகமான Effectகள் வெளியிட்டது . பயனர்கள் இப்போது மொத்தம் 10 விளைவுகளிலிருந்து ஒன்றை தேர்ந்தெடுக்கலாம்.
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதே போல எதிர்ப்புறம் சாட் செய்பவர் எந்த மொழியில் சாட் செய்தாலும் அதனை நமது விருப்பத்திற்கு ஏற்ற மொழியில் மொழிபெயர்ப்புசெய்து கொள்ளும் வசதியை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்த உள்ளது. உலக அளவில் அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் மெசஞ்சர் செயலியாக இருக்கும் வாட்ஸ்அப் இந்த புதிய அப்டேட்டின் மூலம் மேலும் பல புதிய யூசர்களை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்ஸ் அப்பில் அறிமுகப்படுத்தப் போகும் இந்த புதிய ட்ரான்ஸ்லேஷன் வசதியில் மூன்றாம் தரப்பு செயலிகள் நல்லது சர்வர்கள் ஏதும் பயன்படுத்தப்பட போவதில்லை. அதற்கு பதிலாக யூசர்கள் தங்களது மொபைலிலேயே ஏற்கனவே டவுன்லோட் செய்து வைத்துள்ள லாங்குவேஜ் பேக்களை கொண்டு ட்ரான்ஸ்லேஷன் பிராசஸ் ஆனது நிகழ்த்தப்படும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்