இந்தியாவில் புதிய மால்வேர் தாக்குதல், இந்த செயலிகள் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ளதா?

இந்த 'ஏஜென்ட் ஸ்மித்' மால்வேர், '9ஆப்ஸ்' (9Apps) என்ற மூன்றாம்-தர செயலி மூலமாகவே அறிமுகமாகியுள்ளது.

இந்தியாவில் புதிய மால்வேர் தாக்குதல், இந்த செயலிகள் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ளதா?

ஆண்ட்ராய்ட் மீது தாக்குதல் நடத்தும் 'ஏஜென்ட் ஸ்மித்' மால்வேர்

ஹைலைட்ஸ்
  • 'ஏஜென்ட் ஸ்மித்' என பெயரிடப்பட்டுள்ள புதிய ஸ்மார்ட்போன் மால்வேர்
  • '9ஆப்ஸ்' (9Apps) என்ற மூன்றாம்-தர செயலி மூலமாகவே அறிமுகம்
  • 'கூகுள் ப்ளே ஸ்டோர்'-ன் சில செயலிகள் முலமாகவும் தாக்குதல்
விளம்பரம்

'ஏஜென்ட் ஸ்மித்' (Agent Smith) என பெயரிடப்பட்ட புதிய ஸ்மார்ட்போன் மால்வேர் (Malware), உலகம் முழுவதும் உள்ள ஸ்மார்ட்போன் சாதனங்கள் மீது தன் தாக்குதலை நடத்தியுள்ளது. உலகம் முழுவதும் 25 மில்லியன் ஸ்மார்ட்போன்களை தாக்கிய இந்த மால்வேர், இந்தியாவில் தாக்கத்தை கொஞ்சம் கடுமையாகவே அளித்துள்ளது. இந்தியாவில் 15 மில்லியன் ஸ்மார்ட்போன்களை தாக்கியுள்ளது. இந்த தகவலை 'செக் பாய்ன்ட் ரிசர்ச்' (Check Point Research) வெளியிட்டுள்ளது. கூகுள் சார்ந்த சப்ட்வேர் போலவே இருக்கும் இந்த சப்ட்வேரை, உங்கள் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்தவுடன் உங்கள் கவணம் இல்லமலேயே, உண்மையான சாப்ட்வேரை அகற்றிவிடும்.

இது குறித்து 'செக் பாய்ன்ட் ரிசர்ச்' வெளியிட்டிருந்த அறிக்கையில், ஸ்மார்ட்போன்களில் இந்த 'ஏஜென்ட் ஸ்மித்' மால்வேர், போலியான விளம்பரங்கள் மூலமான நிதி ஆதாயத்திற்காகவே, ஸ்மார்ட்போன்களில் நுழைந்துள்ளது. ஆனால், வரும்காலத்தில் இந்த சாப்ட்வேர் இன்னும் கொடிய தீமைகள் ஏற்படுத்தலாம் என கூறியுள்ளது.

'கூகுள் சார்ந்த சாப்ட்வேர் போலவே தோற்றமளிக்கும் இந்த சாப்ட்வேரை, ஒருமுறை உங்கள் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்துவிட்டால், உங்கள் கவணம் இல்லமலேயே, ஸ்மார்ட்போனில் உள்ள உண்மையான சாப்ட்வேரை அகற்றிவிட்டு அந்த இடத்தில் அதே மாதிரி தோற்றம் கொண்ட அபாயகரமான போலி சாப்ட்வேரை இடமாற்றம் செய்துவிடும்.'

செக் பாய்ன்ட் ரிசர்ச்சின் ஆராய்ச்சியின்படி இந்த 'ஏஜென்ட் ஸ்மித்' மால்வேர், '9ஆப்ஸ்' (9Apps) என்ற மூன்றாம்-தர செயலி மூலமாகவே அறிமுகமாகியுள்ளது. இந்த மால்வேர் குறிப்பாக அரபிக், ஹிந்தி, இந்தோனேசியன் மற்றும் ரஸ்யன் மொழியை பேசுபவர்கள் மீதே தாக்குதலை நடத்தியுள்ளது. இது நடத்திய தாக்குதலில் அதிகபடியாக பாதித்தது இந்தியா, அதனை தொடர்ந்து அருகில் உள்ள நாடுகளான வங்கதேசம் மற்றும் பாக்கிஸ்தான். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் இந்த மால்வேரினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

agent smith map check point Agent Smith

'9ஆப்ஸ்'-ல் இடம் பெற்றிருக்கும் இந்த சில ஆப்களின் மூலாம், இந்த மால்வேர் ஸ்மார்ட்போன்களில் தாக்குதலை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. 

கலர் போன் ஃப்ளாஷ் - கால் ஸ்கிரீன் தீம் (Color Phone Flash – Call Screen Theme)
போட்டோ ப்ரஜெக்டர் (Photo Projector)
ரேபிட் டெம்பில் (Rabbit Temple)
கிஸ் கேம்: டச் ஹர் ஹார்ட் (Kiss Game : Touch Her Heart) 

இம்மாதிரியான சிலசெயலிகள் மூலமாக தன் தாக்குதலை ஏற்படுத்தி வருகிறது. 

'9ஆப்ஸ்' மட்டுமின்றி 'கூகுள் ப்ளே ஸ்டோர்'-ன் சில செயலிகள் முலமாகவும் இந்த மால்வேர் ஸ்மார்ட்போன்கள் மீது தாக்குதலை ஏற்படுத்துகிறது.

ப்ளாக்மேன் கோ ( Blockman Go: Free Realms & Mini Games by Blockman Go Studio)
குக்கிங் விட்ச் (Cooking Witch by Ghost Rabbit)
லூடோ மாஸ்டர் (Ludo Master – New Ludo Game 2019 For Free by Hippo Lab)
ஏங்ரி வைரஸ் (Angry Virus by A-Little Game)
பயோ ப்ளாஸ்ட் (Bio Blast – Infinity Battle: Shoot virus! by Taplegend)
ஷூட்டிங் ஜெட் ( Shooting Jet by Gaming Hippo)
கன் ஹீரோ (Gun Hero: Gunman Game for Free by Simplefreegames)
கிலாஷ் ஆப் வைரஸ் (Clash of Virus by BrainyCoolGuy)
ஸ்டார் ரேஞ்ச் ஈStar Range by A-little Game)
கிரேஷி ஜூஸர் (Crazy Juicer – Hot Knife Hit Game & Juice Blast by Mint Games Global)
ஸ்கை வாரியர்ஸ் (Sky Warriors: General Attack)
 

agent smith apps infected Agent Smith Infected Apps

இதிலுள்ள பல செயலிகளை 1,00,000-த்திற்கும் மேற்பட்டோர் பதிவிரக்கம் செய்துள்ளனர். இவற்றில் இரண்டு செயலிகளின் பதிவிரக்கம் 10 மில்லியனை தாண்டியுள்ளது. கூகுள் ப்ளே ஸ்டோர், ஏற்கனவே இந்த செயலிகளை தன் தளத்தில் இருந்து அகற்றி விட்டது. இருந்தாலும், இவற்றில் எந்த செயலியும் உங்கள் ஸ்மார்ட்போனில் இல்லை எனபதை உறுதி செய்துகொள்ளுங்கள். அப்படி இருந்தால், அந்த செயலியை உடனடியாக உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து அகற்றி விடுங்கள்.

செக் பாய்ன்ட் ரிசர்ச் மேலும் கூறுகையில், கடந்த ஜூன் மாதம், லொடோர் (Lotoor), ட்ரியடா (Triada) மற்றும் டார்க் (Ztorg) என ஸ்மார்ட்போன்களை தாக்கிய மால்வேர்களை சேர்த்து வைத்ததுபோல இந்த மால்வேரின் செயல்பாடு உள்ளது. இந்த மூன்று மால்வேர்களின் முக்கியமான வேலை என்னவென்றால், லொடோர் விளம்பரங்களை காண்பிக்கும், ட்ரியடா உங்கள் அனுமதியின்றி மால்வேர்களை பதிவிரக்கம் செய்யும், டார்க்  உங்கள் கவணம் இல்லாமல் புதிய செயலிகளை இன்ஸ்டால் செய்யும்.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. Samsung Unpacked 2025: Z Flip 7 வந்துருச்சு! ₹1.1 லட்சத்துல பெரிய கவர் ஸ்க்ரீன், வேகமான சிப்செட்
  2. அறிமுகமானது Samsung Galaxy Z Fold 7: 1TB ஸ்டோரேஜ், பிரம்மாண்ட டிஸ்ப்ளே - ஜூலை 12 வரை சிறப்பு ப்ரீ-ஆர்டர்!
  3. Amazon Prime Day 2025: Samsung Galaxy Buds 3 Pro-வுக்கு ₹9,000 தள்ளுபடி! வெறும் ₹10,999-க்கு வாங்க வாய்ப்பு!
  4. Amazon Prime Day 2025: iQOO போன்களுக்கு அதிரடி தள்ளுபடி! ₹52,999-க்கு iQOO 13
  5. அதிர்ச்சி! Vivo X Fold 5 விலை ₹1.5 லட்சம்! X200 FE-ல் 6500mAh பேட்டரி - லீக் தகவல்கள் இதோ!
  6. Apple-ன் அடுத்த மாஸ்டர்பீஸ்: iPhone 17 Pro Max-ல் பேட்டரி புரட்சி! நீண்ட நேரம் யூஸ் பண்ணலாமா?
  7. Honor X9c 5G: ஜூலை 7-ல் இந்திய லான்ச்! 108MP OIS கேமரா, 6600mAh பேட்டரியுடன் மிரட்ட வருகிறது!
  8. Amazon Prime Day Sale: எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு 65% வரை ஆஃபர்! பேங்க் சலுகைகளுடன் அசத்துகிறது!
  9. నథింగ్ ఫోన్ 3 స్మార్ట్‌ఫోన్ Android 15 ఆధారంగా రూపొందించిన నథింగ్ OS 3.5 పై రన్ అవుతుంది
  10. Nothing Headphone 1: 80 மணி நேர பேட்டரி லைஃப், டிரான்ஸ்பரண்ட் டிசைனுடன் இந்தியாவில் லான்ச்!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »