அடுத்த ரவுண்டு ரெடி... இந்தியாவில் மேலும் 47 சீன செயலிகளுக்குத் தடை விதிக்கப்படும் எனத் தகவல்!

அடுத்த ரவுண்டு ரெடி... இந்தியாவில் மேலும் 47 சீன செயலிகளுக்குத் தடை விதிக்கப்படும் எனத் தகவல்!

இந்தியாவில் புதிதாக 47 சீன செயலிகளுக்குத் தடையா?

ஹைலைட்ஸ்
  • தடைசெய்யப்படவுள்ள 47 ஆப்களின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை
  • 250க்கும் மேற்பட்ட ஆப்கள் ஆய்வு செய்யப்பட்டன
  • ஏற்கனவே டிக்டாக், ஹலோ, யுசி பிரவுசர் ஆப்கள் தடைசெய்யப்பட்டுள்ளன
விளம்பரம்

கடந்த மாதம் டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 58 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்திருந்த நிலையில், தற்போது மேலும் 47 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. 

இந்தியாவின் தேசிய நலன் மற்றும் பாதுகாப்பு கருதி கடந்த ஜூன் மாத இறுதியில் 58 சீன ஆப்களை மத்திய அரசு தடை செய்தது. குறிப்பாக டிக்டாக், ஹலோ உள்ளிட்ட மிகப் பிரபலமான செயலிகள் தடைசெய்யப்பட்டன. இந்த செயலிகள் இந்தியப் பயனர்களின் விவரங்களை சீனாவுக்கு அனுப்பவுதாகவும், இதனால் தேசப்பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படலாம் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 69A இன் கீழ் அந்த ஆப்கள் தடைசெய்யப்படுவதாக  அறிவிக்கப்பட்டது.

மத்திய அரசின் இந்தத் தடை உத்தரவைத் தொடர்ந்து, டிக்டாக், ஹலோ, யுசி பிரவுசர் உள்ளிட்ட ஆப்கள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டன. ஏற்கனவே, அந்த ஆப்களைப் பயன்படுத்தி வந்தாலும், அவைகளும் முடக்கப்பட்டன. தடை செய்யப்பட்ட ஆப்களை ஓப்பன் செய்தால், அதில் ஒன்றுமே இருக்காது.  மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவும், எதிர்ப்பும் வந்தன. குறிப்பாக டிக்டாக் பிரியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டது.

இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் தடை செய்யப்பட்ட ஆப்களை ஒத்து இருக்கும் மற்ற 47 சீன ஆப்களையும் இந்திய அரசாங்கம் தடை செய்யவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. புதிதாக எந்தெந்த ஆப்கள் தடைசெய்யப்பட உள்ளன என்பது குறித்த விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 

இதற்கு முன்பு மத்திய அரசு தடை செய்த கேம்ஸ்கேனர், ஷேர்இட் மற்றும் யுசி பிரவுசர் உள்ளிட்ட ஆப்களைப் போலவே, அதன் குளோன் போன்று கிட்டத்தட்ட 47  சீன ஆப்கள் இருப்பதாகவும், அவை தடை செய்யப்பட உள்ளதாகவும் டிடி நியூஸ் டுவீட் செய்துள்ளது. அதே நேரத்தில் பப்ஜி போன்ற கேம் ஆப்களும் இதில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.  


Why are smartphone prices rising in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: app ban, Chinese apps, India, China, App ban in India
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
© Copyright Red Pixels Ventures Limited 2024. All rights reserved.
Trending Products »
Latest Tech News »